5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: “நாங்க ஆலமரம்… சரியான நேரத்தில் பதிலடி தருவோம்” விஜய்க்கு முதல் பதிலடி கொடுத்த திமுக!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார். இந்த மாநாட்டில் தனது கட்சி கொள்கைகளை அறிவித்த விஜய், வெளிப்படையாக பல்வேறு அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக திமுவை நேரடியாக விமர்சித்தார். அதாவது, திராவிட மாடல், குடும்ப சுயநலம் ஆட்சி, அரசியல் எதிரி போன்ற வார்த்தைகளை கூறி கடுமையாக விமர்சனம் செய்தார்.

TVK Vijay: “நாங்க ஆலமரம்… சரியான நேரத்தில் பதிலடி தருவோம்” விஜய்க்கு முதல் பதிலடி கொடுத்த திமுக!
த.வெ.க விஜய் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Oct 2024 23:18 PM

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் விஜய் நடத்தினார்.  கடந்த பிப்ரவரி மாதம்  தமிழக வெற்றிக் கழக மாநாட்டை தொடங்கிய விஜய்,   2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  மாநாட்டில் கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் ரேம்ப் வாக் செய்து, இருபுறமும் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டுகளை கழுத்தில் அணிந்து கொண்டு தொண்டர்களை நோக்கி கை அசைத்து மேடை நோக்கி விஜய் சென்றார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்கள் போன்றவற்றை அறிவித்தார்.

விஜய்க்கு முதல் பதிலடி கொடுத்த திமுக

அதன்படி, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார் ஆகியோர் கொள்கை வழிகாட்டிகளாக த.வெ.க ஏற்றுள்ளதாக கூறினார்.  தனது கட்சி கொள்கைகளை அறிவித்த விஜய், வெளிப்படையாக பல்வேறு அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக திமுவை நேரடியாக விமர்சித்தார். அதாவது, திராவிட மாடல், குடும்ப சுயநலம் ஆட்சி, அரசியல் எதிரி போன்ற வார்த்தைகளை கூறி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதுவரை திமுகவை நேரடியாக விமர்சனம் செய்யாத விஜய், கட்சியின் முதல் மாநாட்டிலேயே கடுமையாக தாக்கி பேசினார். விஜய் பேசியது தமிழக அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு திமுகவில் கடுமையான எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.

Also Read; தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய டாப் விஷயங்கள் இதோ!

அதன்படி, ”திமுக என்பது ஆலமரம். காய்த்த மரம் தான் கல்லடி படும் என்று பழமொழி இருக்கும். யார் கல் எறிந்தாலும் தாங்கிக் கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது. வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை விமர்சிப்பார்கள். எனவே, விமர்சனங்களை எதிர்கொண்டு சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம்” என்றார்.

பாஜக சொல்வது என்ன?

மாநாட்டில் திமுகவை மட்டும் இல்லாமல் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். அதாவது, பிளவுவாத அரசியல், பாசிசம் போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டு  பாஜகவை மறைமுகமாக விஜய் விமர்சித்தார். மேலும்,   மோடி மஸ்தான் வேலை பலிக்காது என்றும் பேசினார்.  இதற்கு பாஜக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் பேச்சு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “பாஜக பிரிவினை வாதத்தை ஏற்படுத்தவில்லை. பிளவை ஏற்படுத்தவில்லை. வளர்ச்சியை தான் அவர்கள் கொண்டு வருகிறார்கள். பாஜகவை அவர் நினைப்பது தவறு. கொள்கை எதிரியாக நாங்கள் இருக்க முடியாது என்று எடுத்து கூறினால் அவர் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம்.

Also Read: அதிமுகவை சீண்டாத விஜய்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கணக்கு இதுதானா?

நீட்டை எதிர்ப்பது, மத்திய அரசை பிளவுவாதம் என்பது தவறானது. திமுக எதிர்ப்பை பதிவு செய்திருப்பதை வரவேற்கிறோம்” என்றார். மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்கிறார் விஜய். இது எங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. எங்கள் கொள்கையும் அவர் கொள்கையும் நேர் எதிரானது.

பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பேன் என்று விஜய் கூறுவதில் உடன்பாடு இல்லை. இது குழப்பான கொள்கை முடிவு. எனவே, யார் காலையும் நம்பி பயணிக்காதவன். நான் தனித்து போட்டியிடுவேன் என்று ஏற்கனவே கூறினேன். நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை” என்றார்.

கூட்டணிக்கு அழைப்பு:

தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கியவுடன் விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இன்று நடந்த மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  அதன்படி, ”தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு.

2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றால் விரும்பி வருவோருடன் இணைவேன்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் யார் யார் எந்த கட்சியினர் விஜய்யுடன் கூட்டணி வைத்து 2026 தேர்தலை சந்திப்பார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Latest News