Stomach Pain: சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இந்த தவறுகளை செய்யாதீங்க..! - Tamil News | Do you get stomach ache immediately after eating, this is the reason; health tips in tamil | TV9 Tamil

Stomach Pain: சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!

Published: 

07 Nov 2024 22:07 PM

Health Tips: காலை உணவு முதல் உறங்கும் நேரம் வரை பெரும்பாலான மக்கள் நேரத்திற்கு சாப்பிடாமல், நேரத்திற்கு தூங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் சிலருக்கு சாப்பிட்ட உடனே வயிற்று வலி வரும். அதாவது கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.

1 / 6இன்றைய

இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகள் காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடல் பருமன், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை இன்றைய கால இளைஞர்களும் சந்திக்கின்றனர். அதனால், ஆரோக்கியம் என்பது காணாமல் போய்விடுகிறது.

2 / 6

காலை உணவு முதல் உறங்கும் நேரம் வரை பெரும்பாலான மக்கள் நேரத்திற்கு சாப்பிடாமல், நேரத்திற்கு தூங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் சிலருக்கு சாப்பிட்ட உடனே வயிற்று வலி வரும். அதாவது கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.

3 / 6

உடலில் வயிற்று புண், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தைராய்டு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு வயிற்று வலி ஏற்படும்,. அந்தவகையில், சாப்பிட்ட உடனே வயிற்று வலி வராமல் இருக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

4 / 6

உடலில் சாப்பிடும் உணவு செரிமானம் ஆக தண்ணீர் மிக முக்கியம். பலர் உடலுக்கு தேவைப்படும் அளவிற்கு கூட தண்ணீர் எடுத்துக்கொள்வது கிடையாது. இதனால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, உணவு ஜீரணிக்க முடியாத சூழலை தருகிறது. இது வயிற்றில் வலி அல்லது பிடிப்பை உண்டாகும். எனவே, அதிகளவில் தண்ணீர் குடியுங்கள்.

5 / 6

சாப்பிட்ட உடனே படுக்கும்போது வயிற்று அமிலம் பின்னோக்கி மேல் நோக்கி நகரும். இது வயிற்றில் பிடிப்புகளை உண்டாக்கி, வலியை கொடுக்கும். அதேபோல், ஒரு வேளையில் அதிக உணவை உட்கொள்வதால் மோசமான செரிமானம் ஏற்பட்டு வயிற்று வலியை ஏற்படுத்தும்.

6 / 6

பழ ஜூஸ் மற்றும் சீஸ் போன்றவை வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கும். இது வயிற்றில் வலியை கொடுக்கும். அதேபோல், சாப்பிட்ட உடனே இனிப்புகளை சாப்பிடக்கூடாது. இதுவும் வலியை கொடுக்கலாம். சாப்பிட்டவுடன் வயிற்று வலி வராமல் இருக்க, சிறிது நேரம் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது வயிறு தொடர்பான பிரச்சனையை தடுக்கும்.

பாதாம் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் சரியாகுமா..?
15 நாட்களுக்கு ஒருமுறை கல்லீரலை சுத்தம் செய்வது எப்படி..?
கருப்பு நிற புடவையில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்
புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்