காலணி அணிய தடை.. இரு நாட்டு குடியுரிமை.. இந்தியாவில் உள்ள சில வித்தியாசமான கிராமங்கள்! - Tamil News | Do you know some of the strange villages in India | TV9 Tamil

காலணி அணிய தடை.. இரு நாட்டு குடியுரிமை.. இந்தியாவில் உள்ள சில வித்தியாசமான கிராமங்கள்!

Published: 

23 Nov 2024 18:09 PM

Interesting facts about Indian villages: இந்தியாவில் பல கிராமங்கள் உள்ளது. இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்கள் உள்ளது. இந்தியாவில் உள்ள சில கிராமங்களில் பலவிதமான விஷயங்கள் நடைமுறையில் உள்ளது. அவற்றைப் பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்

1 / 5கர்நாடக

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் மாத்தூர். இந்த கிராமம் 'சமஸ்கிருத கிராமம் என்று அழைக்கப்படுகிறது'. இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பயன்பாட்டில் இல்லாத நிலையில் இந்த கிராமத்தில் உள்ள சுமார் 5000 நபர்கள் சமஸ்கிருதம் பேசவும், எழுதவும், படிக்கவும் செய்கின்றனர்.

2 / 5

நாகலாந்து மாநிலம் மான் மாவட்டத்தில் அமைந்துள்ளது லாங்குவா கிராமம். இந்த கிராமத்தின் சில பகுதிகள் மியான்மர் நாட்டில் அமைந்துள்ளது. இந்த கிராமம் இரண்டு தேசங்களிலும் இருப்பதால் இந்த மக்களுக்கு இரண்டு தேசத்தின் குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

3 / 5

பர்வான் கலா‌ என்னும் கிராமம் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு காரணங்களுக்காக ஆண்கள் திருமணம் செய்து கொள்வதே இல்லை. சுமார் 50 ஆண்டுகளாக இங்குள்ள ஆண்களுக்கு திருமணம் நடைபெறவில்லை. தொலைத் தொடர்பு, மின்சாரம், தண்ணீர், நீர்ப்பாசனம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த கிராமத்தில் இருக்கும் மோசமான நிலையால் இங்கு உள்ள ஆண்களுக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது.

4 / 5

மகாராஷ்டிரா மாவட்டத்தில் அமைந்துள்ளது சனி சிங்கனாப்பூர் கிராமம். இந்த கிராமம் கதவுகள் இல்லா கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள எந்த வீடுகளுக்கும் கதவு இருக்காது. மேலும் வணிக கட்டிடம், வங்கிகள் என எதற்கும் கதவு இருக்காது. சனி பகவான் இந்த கிராமத்தை தீமையிலிருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த கிராமத்தில் யாரேனும் திருடினால் அவர் சனி பகவானால் தண்டிக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.

5 / 5

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வெள்ளகவி‌ என்ற கிராமத்தில் காலணிகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வீடுகளை விட கோயில்கள் அதிகம் உள்ளது. இங்கு 25க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இந்த கிராமத்தில் தெய்வம் வாழ்வதாக நம்பப்படுவதால் இங்கு யாரும் காலணிகள் அணிவதில்லை. இந்த ஊருக்கு செல்லும் வெளியூர் வாசிகளுக்கும் காலணி அணிய அனுமதி இல்லை.‌ இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் இரவு 7 மணிக்கெல்லாம் உறங்கச் சென்று விடுவர். இங்கு சத்தமாக பேசவோ, இசை கேட்கவோ, சத்தமாக விளையாடவோ அனுமதி இல்லை.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?