FWD இதன் விரிவாக்கம் Front Wheel Drive. இந்த அமைப்பைப் பயன்படுத்தும் காரில், இயந்திரம் நேரடியாக முன் டயர்களுக்கு சக்தியை அனுப்புகிறது. இந்த அமைப்பு பொதுவாக குடும்ப கார்கள் மற்றும் சிறிய கார்களில் காணப்படுகிறது. மற்ற டிரைவிங் மோடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த செட்டப் மூலம் வாகனம் அதிக மைலேஜை வழங்குகிறது. மேலும், முன் சக்கர டிரைவ் கார் வழுக்கும் சாலைகளில் சிறந்த பிடியைப் பராமரிக்க டிரைவருக்கு உதவுகிறது. உதாரணமாக, மாருதி சுசுகி வேகன்ஆர், டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் ஐ20 போன்றவை.