ப்ளாக் காபி எப்போது அருந்த வேண்டும் தெரியுமா? | Do you know when to drink black coffee Tamil news - Tamil TV9

புற்றுநோய் நெருங்காது.. ப்ளாக் காபி எப்போது அருந்த வேண்டும் தெரியுமா?

Published: 

18 Nov 2024 12:35 PM

Black coffee: கிராமப்புறங்களில் கடுங்காபி என அழைக்கப்படும் ப்ளாக் காபி குடிப்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன. எத்தனை கோப்பைகள் வரை அருந்தலாம்? எது சரியான நேரம்.. வாங்க பார்க்கலாம்.

1 / 7காபி

காபி அதன் பல்வேறு நன்மைகளுக்காக அறியப்படுகிறது. சரியான முறையில் காபி அருந்துவதால், டைப் 2 நீரிழிவு மற்றும் மனச்சோர்வு அபாயம் குறைக்கப்படலாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

2 / 7

உடற்பயிற்சியின் போது பலம், சக்தியை அதிகரிக்க உதவும் என்பதால் பலரும் இதனை உடற்பயிற்சிக்கு முன்னர் அருந்துகின்றனர்.

3 / 7

தி அமெரிக்கன் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வில் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 5 கோப்பைகளுக்கு அதிகமாக காபி அருந்தக் கூடாது என்றும் இதனால் உடல் நல பாதிப்புகள் நாளைடவில் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

4 / 7

காபி பானத்துக்கு ஒருவர் அடிமையானால் அவருக்கு குமட்டல், தூக்கமின்மை, மனச்சோர்வு, இதய பிரச்னை, தளர்ச்சி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

5 / 7

எனினும், ப்ளாக் காபி அளவாக குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது நீரிழிவு பிரச்னையை சீராக வைக்க உதவுகிறது.

6 / 7

காபி அளவாக குடிப்பதால் மூளை உற்சாகம் அடைகிறது. ஈரலுக்கு பலம் கிடைக்கிறது. புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

7 / 7

ப்ளாக் காபி குடிக்க அதிகாலை சிறந்த நேரமாக உள்ளது. அளவான இனிப்பில் காபி அருந்தினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன எனக் அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!