மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்.. எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி: எதில் பெஸ்ட் ரிட்டன்? | Do you know which bank has the best return for 3 year fixed deposit investment Tamil news - Tamil TV9

மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்.. எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி: எதில் பெஸ்ட் ரிட்டன்?

Published: 

17 Nov 2024 16:49 PM

3 year fixed deposit : 3 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் கிடைக்கின்றன என்பது குறித்து பார்க்கலாம். இந்தக் கட்டுரையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின் வட்டி விகிதம் கொடுக்கப்பட்டுள்ளன.

1 / 9ஃபிக்ஸட்

ஃபிக்ஸட் டெபாசிட்கள் பாதுகாப்பான, யூகிக்கக்கூடிய வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பிரபலமான முதலீட்டுத் தேர்வாகும். இதில், முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு வங்கியில் மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டும். எஃப்.டி கணக்கைத் திறக்கும் நேரத்தில் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வருவாய் அளிக்கப்படும்.

2 / 9

இங்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின் வட்டி விகிதம் கொடுக்கப்பட்டுள்ளன.

3 / 9

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை பொறுத்தவரை பொது குடிமக்கள் தவிர மூத்தக் குடிமக்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கப்படும். இந்த விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். இது வங்கியின் விதிமுறைகளை பொறுத்தது.

4 / 9

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், பொது வாடிக்கையாளர்கள் 3 ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.75 சதவீத வட்டியை பெறுகிறார்கள். மூத்த குடிமக்கள் 7.25 சதவீத வட்டியை அனுபவிப்பார்கள்.

5 / 9

கனரா வங்கியில் மூத்தக் குடிமக்களின் 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.30 சதவீத வட்டியும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 6.80 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

6 / 9

தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு பொதுக்குடிக்கு 7 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.50 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

7 / 9

பஞ்சாப் நேஷனல் வங்கியை பொறுத்தவரை 3 ஆண்டு எஃப்.டி-க்கு பொதுக்குடிகளுக்கு 7 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.50 சதவீத வட்டியும் அளிக்கப்படுகிறது.

8 / 9

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டு எஃப்.டிக்கு மூத்தக் குடிமக்களுக்கு 7.50 சதவீதமும், பொதுக் குடிகளுக்கு 7 சதவீதமும் வட்டியை வழங்குகிறது.

9 / 9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பயனரின் முதலீட்டு லாப நஷ்டங்களுக்கு டி.வி 9, நிர்வாகம் பொறுப்பேற்காது. எந்தவொரு முதலீட்டுக்கு முன் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.

புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி
அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷிற்கு டும் டும் டும்?
தமிழ் சீரியல்களின் டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ
தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?