1 ஆண்டு எஃப்.டி-க்கு 7.60% வட்டி.. எந்த வங்கி தெரியுமா? | Do you know which bank offering 7 60 PC interest for 1 year FD Tamil news - Tamil TV9

1 ஆண்டு எஃப்.டி-க்கு 7.60% வட்டி.. எந்த வங்கி தெரியுமா?

Updated On: 

18 Nov 2024 13:11 PM

1 Year Fixed Deposit Interest rates : இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் வயது வித்தியாசமின்றி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். குறைந்த ரிஸ்க், உத்தரவாத வருமானம் உள்ளிட்டவை இதற்கு காரணம் ஆகும். இங்கு, 7 வங்கிகளின் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 / 9ஃபிக்ஸட்

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு, முதலீட்டாளர்கள் வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பார்கள். பொதுவாக வங்கிகள், குறுகிய கால எஃப்.டி முதலீடுக்கு உயர் வட்டியும், நீண்ட கால முதலீடுக்கு மிதமான வட்டியும் வழங்குகின்றன.

2 / 9

கோடக் மஹிந்திரா வங்கி ஜூன் 14 முதல் பொதுக் குடிமக்களுக்கு 7.1 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதமும், ஓராண்டு ஃபிக்ஸட்டெபாசிட் முதலீடுக்கு வழங்குகிறது.

3 / 9

ஹெச்டிஎஃப்சி வங்கி ஜூலை 24, 2024 முதல் 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு பொதுக் குடிமக்களுக்கு 6.6 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.1 சதவீதமும் வழங்குகிறது.

4 / 9

ஃபெடரல் வங்கி அக்டோபர் 16 முதல் ஒரு வருட நிலையான வைப்புத் தொகைக்கு பொதுக் குடிமக்களுக்கு 6.8 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

5 / 9

பஞ்சாப் நேஷனல் வங்கி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒரு வருட நிலையான வைப்புத்தொகைக்கு பொதுக் குடிமக்களுக்கு 6.85 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீதமும் வட்டியாக வழங்குகிறது.

6 / 9

கனரா வங்கி 1 ஆண்டு எஃப்.டிக்கு பொதுகுடிமக்களுக்கு 6.85 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.35 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 11 முதல் அமலுக்கு வந்துள்ளன.

7 / 9

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) ஜூன் 15 முதல் நடைமுறைக்கு வந்த விகிதங்களின்படி இந்தியாவின் மிகப்பெரிய வங்கி பொதுக் குடிமக்களுக்கு 6.8 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதமும் வழங்குகிறது.

8 / 9

ஐசிஐசிஐ வங்கியானது 1 ஆண்டு எஃப்.டி-க்கு பொதுக் குடிமக்களுக்கு 6.7 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.20 சதவீதமும் வழங்குகிறது.

9 / 9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பயனரின் முதலீட்டு லாப நஷ்டங்களுக்கு டி.வி 9, நிர்வாகம் பொறுப்பேற்காது. எந்தவொரு முதலீட்டுக்கு முன் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!