Angry: கோபம் வரும்போது கை கால்கள் ஏன் நடுங்குகிறது தெரியுமா? - Tamil News | do you what iss the reason for leg and hand shake when gets angry details in tamil | TV9 Tamil

Angry: கோபம் வரும்போது கை கால்கள் ஏன் நடுங்குகிறது தெரியுமா?

Published: 

21 Oct 2024 16:18 PM

Anger: கோபம் என்பது அனைவரிடமும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான உணர்வு. மகிழ்ச்சி, கவலை, துக்கம் போலவே கோபமும் மனிதனின் உணர்வுகளில் ஒன்று. நமக்கு பிடிக்காத விஷயங்கள் நடந்தாலோ, பிடித்த விஷயங்கள் நடக்காமல் போனாலும் அல்லது யாராவது நம்மை தொந்தரவு செய்தாலோ உடனே கோபம் வந்துவிடும். கோபம் தான் ஒருவருக்கு எதிரி என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு.

1 / 5கோபத்தின்

கோபத்தின் போது உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கும்.‌ கோபத்தால் ஏற்படும் சூழ்நிலையை சமாளிக்க அது உடலை தயார் படுத்துகிறது. இதனால்தான் உடல் நடுங்கத் கோபம் அல்லது மன அழுத்தத்திலிருந்து விடுபட இது உதவுகிறது. கோபப்படும்போது தசைகள் பதற்றம் அடையும். இதனால் கை கால்களில் நடுக்கம் ஏற்படுகிறது. கோபமான நபர் கட்டுப்பாட்டை இழக்கும் போது இது நிகழ்கிறது.

2 / 5

பொதுவாக, கோவப்படும்போது இதயத்துடிப்பு அதிகமாகும். இதனால் உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதன் காரணமாக கைகளோடு சேர்ந்து உடலிலும் அதிர்வு ஏற்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரிப்பதால் உடலில் உணர்வு அதிகரிக்கும். இது கட்டுப்பாட்டு இழக்கும் உணர்வுகளுக்கு வழி வகுக்கும்.

3 / 5

மன அழுத்தம், பதட்டம் அதிகம் இருந்தாலும் கை கால்கள் நடுங்கும் என்கின்றனர் நிபுணர்கள். மன மற்றும் உடல் சோர்வு காரணமாக இது நடக்க வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

4 / 5

எனவே கோபமாக இருக்கும் பொழுது ஆழ்ந்த மூச்சு இவ்வாறு செய்வதால் உடலில் ஆக்சிஜன் அளவு ஒரேடியாக அதிகரிக்கிறது. இது நடுக்கத்தை குறைக்கிறது. தினமும் யோகா, தியானம் செய்த அதிக அளவில் கோபம் ஏற்படுவது குறையும். இதனால் மன அமைதி கிடைக்கும்.

5 / 5

அதிக கோபம் வரும் போது சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்து விடுங்கள். ஒரு டம்ளர் நல்ல தண்ணீர் குடிக்கவும். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் கேட்கும் போது அல்லது பார்க்கும்போது கோபத்தை ஏற்படுத்து விஷயங்களை தவிர்க்க பழகிக்கொள்ளுங்கள்.

முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
பிரபல நடிகையுடன் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுதா?