இன்று பலர் வாழ்க்கை முறையால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். இதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். சிலர் ஜிம்மிற்கு சென்று ஒர்க் அவுட் செய்கிறார்கள், மற்றவர்கள் வீட்டில் உடல் எடையை குறைக்க வழிகளை தேடுகிறார்கள். வீட்டில் உடல் எடையை குறைக்க எளிய வழிகளில் ஒன்று தண்ணீர் குடிப்பது. தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்கும், கொழுப்பை எரிக்கும்.