மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிப்பீர்களா? உஷார்.. இதை தெரிஞ்சுக்கோங்க! - Tamil News | Drinking cooling water will cause this problem details in Tamil | TV9 Tamil

மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிப்பீர்களா? உஷார்.. இதை தெரிஞ்சுக்கோங்க!

Published: 

22 Nov 2024 09:01 AM

Cold Water: பலருக்கும் குளிர்ந்த நீர் குடிக்காமல் இருக்க முடியாது. வெயில், மழை, குளிர் என எந்த காலமாக இருந்தாலும் குளிர்ந்த நீரை குளிர்ந்த நீரை அதிகம் குடிக்கக்கூடாது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அதுவும் இந்த மழைக்காலத்தில் முற்றிலுமாக குளிர்ந்த நிறை அருந்தாமல் இருப்பது நல்லது.

1 / 5குளிர்ந்த

குளிர்ந்த நீரை குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. மழைக்காலம், குளிர் காலத்தில் கூட குளிர்சாதனப் பெட்டியில் தண்ணீரை வைத்து குடிப்பார்கள். அல்லது வெயில் அதிகமாக இருந்தாலும் குளிர்ந்த நீரை அருந்துவார்கள். இது நல்லதல்ல. குளிர்காலத்தில் குளிர்ந்த நீரை குடித்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

2 / 5

குளிர்ந்த நீரை குடிப்பதால் நிச்சயமாக பக்க விளைவுகள் ஏற்படும். குறிப்பாக குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை குடிப்பதால் மார்பில் சளி, தலைவலி கொண்ட பிரச்சனைகள் ஏற்படும். மேலும் தொண்டையையும் பாதிக்கும்

3 / 5

குளிர்ந்த நீர் குடிப்பதால் குரல் வளம் குறையும். மேலும் சளி மற்றும் இருமலையும் உண்டாக்கும். ஜலதோஷம் ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக குறைந்து விடும். ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கலாம்.

4 / 5

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பதால் அது இதயத்தை பாதிக்கிறது. அது இதயத் துடைப்பை மாற்றுகிறது. மேலும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது

5 / 5

குளிர்ந்த நீர் செரிமானத்தை பாதிக்கிறது. சாப்பிட்டதும் குளிர்ந்த நீரை குடித்தால் சாப்பிட்ட உணவுகள் சீக்கிரம் செரிக்காது. அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். பல் பிரச்சனைகளும் ஏற்படும். பற்களின் நரம்புகள் பலவீனமடையும்

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!