மாஸ் ஹீரோவின் பையன்… இவரும் ஹீரோ தான் – யார் இந்த சிறுவன் - Tamil News | Dulquer Salmaan childhood photo viral on social media | TV9 Tamil

மாஸ் ஹீரோவின் பையன்… இவரும் ஹீரோ தான் – யார் இந்த சிறுவன்

Published: 

28 Oct 2024 19:25 PM

2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து  மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி,தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றார் துல்கர்.

1 / 6சமீபத்தில்

சமீபத்தில் சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மானின் சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

2 / 6

மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். கேரள மாநிலம் கொச்சியில் 1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி துல்கர் சல்மான் பிறந்துள்ளார்.

3 / 6

சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக பேரி ஜான் ஆக்டிங் ஸ்டுடியோவில் மூன்று மாத நடிப்புப் படிப்பை படித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘செக்கண்ட் ஷோ’ படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் துல்கர்.

4 / 6

அதனை தொடர்ந்து வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ ரசிகர்களின் மனதில் துல்கருக்கு நீங்காத இடத்தைக் கொடுத்தது. பின்னர் துல்கரின் நடிப்பில் வெளியான ஏபிசிடி, நீலாகாஷம் பச்சைக்கடல் செவ்வண்ண பூமி, பேங்களூர் டேய்ஸ் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

5 / 6

2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து  மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி,தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றார் துல்கர்.

6 / 6

பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி படத்தில் சிறப்பு தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவரது நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படம் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

ஐபோன் 16-க்கு தடை விதித்த இந்தோனேசியா - ஏன் தெரியுமா?
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் பூண்டு!
நடிகை சினேகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தான்!
மாஸ் ஹீரோதான் இந்தப் பையன்... யார் தெரியுதா?