Health Benefits of Eating Fish: வாரத்திற்கு 2 முறை மீன் உணவு.. மாரடைப்பு ஆபத்து குறையுமா..? - Tamil News | Eating fish twice a week may reduce the risk of heart attack; health tips in tamil | TV9 Tamil

Health Benefits of Eating Fish: வாரத்திற்கு 2 முறை மீன் உணவு.. மாரடைப்பு ஆபத்து குறையுமா..?

Published: 

24 Nov 2024 20:29 PM

Fish Benefits: மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் வலிமையை அதிகரிக்கும் நியூரான்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்த உதவும். மீன்களில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன.

1 / 6ஒமேகா

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் முதன்மை உணவு ஆதரமாக மீன் உள்ளது. இது இதய நோய் அபாயத்தை குறைக்கும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வாரத்திற்கு இரண்டு முறையாவது ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த மீன்களை சாப்பிட பரிந்துரைக்கிறது.

2 / 6

மீனில் ஏராளமான புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. 100 கிராம் வேகவைத்த மீனில் 206 கலோரி, 22 கிராம் புரதம், 12 கிராம் கொழுப்பு உள்ளது. மேலும், இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அதிக அளவில் உள்ளது.

3 / 6

அனைத்து மீன்களிலும் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் நல்ல ஆதாரங்களாக உள்லன. மேலும், மீனில் உள்ள ஒமேகா 2 மற்றும் பிற ஊட்டசத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மாரடைப்பு பிரச்சனையையும் குறைக்கிறது.

4 / 6

கர்ப்ப காலத்தில் மீன் உட்கொள்வது கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களின் பிறக்காத குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். மீனில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் டி சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி செய்யும்.

5 / 6

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மீன் சாப்பிடுவதன்மூலம், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். மீனில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உடலின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உதவுகின்றன.

6 / 6

மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் வலிமையை அதிகரிக்கும் நியூரான்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்த உதவும். மீன்களில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!