5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Night Food: இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்.. சிறுநீரகத்திற்கு ஆபத்தை தரும்!

Health Tips: வயிறு மற்றும் குடலில் இருந்து நச்சுகள் உருவாகி இரத்தத்தை சென்றடையும். இங்கிருந்து அவை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு செல்கின்றன. நச்சுக்கள் இவை இரண்டிலும் அதிகமாக சேரும்போது சரியாகச் சுத்தம் செய்ய முடியாமல் அவற்றின் மீது அழுத்தம் ஏற்படுகிறது.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2024 20:20 PM
நவீன வாழ்க்கை முறையில் இரவு நேரத்தில்தான் துரித உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம். இது தூங்கும்போது சரியான ஜீரணமாகாமல் நச்சு பொருளாக மாற தொடங்குகிறது. இதன் காரணமாக உடல் பருமன், எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், குடல் பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகின்றன.

1 / 5
தொடர்ந்து, வயிறு மற்றும் குடலில் இருந்து நச்சுகள் உருவாகி இரத்தத்தை சென்றடையும். இங்கிருந்து அவை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு செல்கின்றன. நச்சுக்கள் இவை இரண்டிலும் அதிகமாக சேரும்போது  சரியாகச் சுத்தம் செய்ய முடியாமல் அவற்றின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்கள் ஏற்படலாம். எனவே, இரவு உணவாக என்ன சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

2 / 5
கோதுமை பொருட்களை இரவில் உணவாக எடுத்துக்கொள்ள கூடாது. இந்த தானியத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் ஜீரணமாக நீண்ட நேரம் எடுக்கும். இது மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளை உண்டாக்கி, உங்களுக்கு தொல்லையாக மாறும்.

3 / 5
இரவில் தயிர் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இரவில் தயிர் சாப்பிடும்போது கபா மற்றும் பித்த தோஷம் அதிகரிக்கலாம். மேலும், கெட்டி தயிர்  சூட்டையும் ஏற்படுத்தி, தூக்கத்தை கெடுக்கலாம். எனவே, இதற்கு பதிலாக மோரை எடுத்து கொள்ளலாம்.

4 / 5
விருந்தாக இருந்தாலும் சரி, வீடுகளாக இருந்தால் சரி சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடும் பழக்கம் பலருக்கும். இந்த பழக்கம் செரிமானத்தை கெடுத்து தொல்லைகளை தரும். இவை ஆயுர்வேதத்தில் கனமான உணவாக கருதப்படுகிறது.

5 / 5
Latest Stories