School Leave: தொடரும் கனமழை.. 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! - Tamil News | educational institutions leave declared due to heavy rain in chennai chengalpattu tiruvallur Cuddalore Villupuram | TV9 Tamil

School Leave: தொடரும் கனமழை.. 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Updated On: 

29 Nov 2024 06:52 AM

Heavy Rain: நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை சென்னை முதல் விழுப்புரம் மரக்காணம் கடற்கரை வரையிலான பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கனமழை தொடங்கும் நேரம் இன்று மாறுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் அதீத கனமழை வரை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் அதீத கனமழை வரை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

2 / 6

ஏற்கனவே நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனிடையே டிசம்பர் 1 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.

3 / 6

இந்நிலையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தபடி, பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று விழுப்புரம், காரைக்கால், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் கல்வி நிறுவனங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4 / 6

சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைப் பொறுத்தவரை இன்று (நவம்பர் 29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அங்கு நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் கடுமையான குளிரும் நிலவுகிறது.

5 / 6

இதற்கிடையில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கால் புயலாக உருவாக வாய்ப்பு குறைவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 30-ம் தேதி காலை 45-55 கி.மீ வேகத்தில் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

6 / 6

அதேசமயம் இன்று இன்று விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க டிப்ஸ்
பிங்க் பால் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்..!
இணையத்தில் கவனம்பெறும் அதிதியின் நியூ ஆல்பம்
பெண்களுக்கு இதெல்லாம் வழங்க வேண்டும் - ஐஸ்வர்யா ராய்