ஃபெங்கல் புயல்.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. இந்த ரூட் ரொம்ப முக்கியம்! - Tamil News | Fengal cyclone chennai beach tambaram train suspended due to very heavy rainfall | TV9 Tamil

ஃபெங்கல் புயல்.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. இந்த ரூட் ரொம்ப முக்கியம்!

Published: 

30 Nov 2024 15:25 PM

Cyclone Fengal : வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல், சென்னைக்கு நெருக்கமாக வந்திருக்கும் நிலையில், புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக, தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 / 5தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5

இதனால் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், வீடுகளை சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல், சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சில பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயங்கி வருகிறது. மேலும், ஃபெங்கல் புயலால் காற்றும் அதிகமாக வீசுவதால் வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றப்பட்டுள்ளது.

3 / 5

இந்த நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல், சென்னைக்கு நெருக்கமாக வந்திருக்கும் நிலையில், புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக, தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையம் அருகே மின் கம்டபி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

4 / 5

ரயில் சேவை தொடர்பாக 044 25330952, 044 25330952 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் ரயில் நிலையம் - 044 25354140 & 22277, எழும்பூர் - 9003161811, தாம்பரம் - 8610459668, செங்கல்பட்டு - 9345962113, பெரம்பூர் - 9345962147 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மெட்ரோ ரயில் சேவை அட்டவணைப்படி வழக்கமாக இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக 1800 425 1511 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

5 / 5

ஃபெங்கல் புயல் காரணமாக நாளை காலை சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நல்ல தூக்கத்திற்கு இந்த வகை உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
பகலில் தூங்குவது நல்லதா - ஆய்வுகள் கூறுவது என்ன?
சேலையில் சொக்கவைக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா
கீர்த்தி சுரேஷா இது... இணையத்தில் வைரலாகும் ஓல்ட் போட்டோ