5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஃபெங்கல் புயல்.. சென்னையில் பேருந்துகள் இயங்குமா? முக்கிய அறிவிப்பு

Cyclone Fengal: சென்னையில் நாளை மாநகர பேருந்து சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Published: 29 Nov 2024 21:50 PM
தென்மேற்கு வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், நாளை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது, நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 240 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 230 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  நாளை மதியம் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை, காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

1 / 5
இந்த ஃபெங்கல் புயல் காரணமாக நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அருகே புயல் கரையை கடக்க இருப்பதால், சென்னையில் நாளை பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தற்போது முதலே சென்னை மற்றும் புறநகரில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று இரவு முதல் தீவிரம் அடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மீட்பு குழுக்கள்  தயார் நிலையில் உள்ளன.

2 / 5
ஃபெங்கல் புயல் காரணமாக, சென்னை மாநகராட்சி மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்கமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

3 / 5
சென்னையில் பூங்காக்கள், கடற்கரை மூடப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதாவது, மெரினா, திருவான்மியூர், காசிமேடு பகுதிகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதோடு,  புயல் குறித்து மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பியது பேரிடர் மேலாண்மை ஆணையம். அதி கனமழை என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க குறுஞ்செய்தியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 / 5
புயல் காரணமாக நாளை சென்னையில் பேருந்துகள் இயங்குமா? இல்லையா என மக்கள் குழப்பத்தில் உள்ளன. அதற்கு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, சென்னையில் நாளை மாநகர பேருந்து சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் மழையை பொருத்து தேவை ஏற்பட்டால் பேருந்து சேவைகள் மாற்றம் செய்யப்படும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

5 / 5
Latest Stories