5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fengal Cyclone: உருவாகிறது தற்காலிக புயல்.. எங்கே, எப்போது கரையை கடக்கும்?

ஃபெங்கல் புயல்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் தற்காலிக புயலாக மாறி, நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Nov 2024 17:52 PM
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை (நவம்பர் 29) காலைக்குள் தற்காலிக புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், அதன்பின் வரும் 30ஆம் தேதி  காரைக்கால்-மகாபலிபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், " ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக இருக்கும். வலுவாக புயலாக உருவாக வாய்ப்பில்லை. இந்த தற்காலிக புயல்  இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக வலுபெறக்கூடும்.

1 / 5
இந்த புயல் வலுவிழந்து கரையை கடக்கும். குறிப்பாக, மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, புதுச்சேரி இடையே கரையை கடக்கும். கரையை கடக்கும்போது 50-60 கீ. மீ வேகத்தில் காற்று வீசும்" என்றார். அதாவது, ஃபெங்கல் புயல் தற்காலிக  புயலாக மாறியுள்ளது. இந்த தற்காலிக புயல் என்றால் 24 மணி நேரத்திற்குள் வலிமை இழக்கும். அப்படி தான் இந்த ஃபெங்கல் புயல் 24 மணி நேரத்திற்குள் வலிமை இழந்து கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

2 / 5
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்   மீண்டும் நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் இருந்து நகராமல் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 3 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.  தற்போது நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது.  இதனால் சென்னை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

3 / 5
இன்று, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

4 / 5
வரும் 30 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

5 / 5
Latest Stories