5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தீபாவளி வெடி வாங்க போறீங்களா? உஷார்.. சைபர் கிரைம் போலீசார் கொடுத்த எச்சரிக்கை!

Fake Online Website: உண்மையான இணையதளம் போன்ற இணையதளங்களை உருவாக்கி அதில் மக்களின் பணத்தை மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதில் ஆர்டர் செய்யப்பட்ட பொருள்கள் வழங்கப்படுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 25 Oct 2024 09:22 AM
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு விற்பனையில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் வழங்கி மக்களை ஏமாற்ற போலி வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறார்கள்.

1 / 5
ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடிகள் தொடர்பாக, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் தேசிய சைபர் கிரைம் அறிக்கை இணையத்தில் 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சைபர் கிரைம்  பிரிவு தெரிவித்துள்ளது. மோசடி செய்பவர்கள் லாபகரமான மற்றும் கவர்ச்சிகரமாக தோற்றுவிக்கும் போலி விளம்பரங்களை உருவாக்குகிறார்கள். குறிப்பாக தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்கிறார்கள்.  மேலும் மக்களை அவர்கள் வாட்ஸ்அப் மற்றும் மொபைல் போன் அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்வார்கள்.

2 / 5
உண்மையான இணையதள பக்கங்கள் போலவே உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைதளங்களில் மக்களின் பணத்தை திருடுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. Kannancrackers.in போன்ற இணையதளங்கள் உண்மையான தோற்றமுடைய தயாரிப்பு பட்டியல்கள், விலை மற்றும் கட்டண தேர்வுகளை காட்டுகின்றன. ஆனால் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பணம் செலுத்தப்பட்டதும் மோசடி செய்பவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமுறைவாகி, அவர்களின் இணையதள தகவலை நீக்கிவிடுகிறார்கள்.  இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.

3 / 5
இந்த மோசடிகளுக்கு இரையாவதை தவிர்க்க, ஆன்லைன் விற்பனையாளர்களின் நண்பகத் தன்மையை சரிபார்க்கவும். சரியான முகவரிகள் மற்றும் தொடர்பு தகவலை சரிபார்க்கவும். வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நேர சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்துகின்றனர். வாங்குபவர்கள் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். மேலும் வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனைகளுக்கு வங்கி அறிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

4 / 5
இது போன்ற மோசடிகளால் நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் கிரைம் கட்டணமில்லா எண்ணான‌1930க்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம். அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யலாம். தீபாவளி ஷாப்பிங் உச்சத்தை எட்டி உள்ளதால் ஆன்லைன் கொள்முதல் செய்யும் போது வாடிக்கையாளர்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

5 / 5
Latest Stories