Skin Care: பளபளப்பான முகத்திற்கு 5 சரும பராமரிப்பு குறிப்புகள்… - Tamil News | Five simple skin care steps for glowing skin details in Tamil | TV9 Tamil

Skin Care: பளபளப்பான முகத்திற்கு 5 சரும பராமரிப்பு குறிப்புகள்…

Published: 

14 Oct 2024 19:08 PM

Face Care: பளபளப்பான சருமம் என்பது பலரின்‌ விருப்பமாக இருக்கிறது. அந்த பளபளப்பான சருமத்தைப் பெற பெரும்பாலானோர் மெனக் கெடுவார்கள். பளபளப்பான முக சருமம் என்பது நம் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்லாமல் இது நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான தோல்கள் இருந்தாலும் பளபளப்பான சருமம் என்பது அனைவரும் பெறக்கூடியது தான்.

1 / 5சுத்தப்படுத்துதல்:

சுத்தப்படுத்துதல்: எந்த ஒரு தோல் பராமரிப்பிலும் சுத்தப்படுத்துதல் ஒரு முக்கியமான முதல் படியாகும். இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு, ஒப்பனை மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கி சுத்தமான அடித்தளத்தை கொடுக்கும். இது டோனர்கள், சீரம்கள்‌ மற்றும் மாய்ஸ்ரைசலின் நன்மையை எளிதாக ஏற்றுக்கொள்ளும். சரும வகைக்கு ஏற்றவாறு மென்மையான கிளீன்சரை பயன்படுத்தவும்.

2 / 5

டோனிங்: டோனர் உங்கள் சருமத்தை மேலும் சுத்தப்படுத்த உதவுகிறது. இது இறந்த சரும செல்களை நீக்கி உங்கள் நிறத்தை மாற்ற செய்கிறது. உங்கள் சருமத்தை தயார் செய்து மாய்ஸ்ரைஸ்சர்கள்‌ மற்றும் சீரம்களை மிகவும் திறம்பட உறிஞ்சுவதற்கு ஏற்பாடு செய்கிறது.

3 / 5

சீரம்கள்: சீரம்கள் சக்தி நிறைந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டவை. நம் உனக்கு இதற்கு தேவையான உடனடி நீரேற்றத்தை இது கொடுக்கும். முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்குவதோடு நீண்ட நாட்களாக இருக்கும் அதிகளவிலான பிக்மென்டேஷனை குறைக்கிறது. விட்டமின் சி சீரம் பயன்படுத்துவதால் நீண்டகால பளபளப்பை கொடுக்கிறது.

4 / 5

மாய்ஸ்சரைசிங்: உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்க மாய்ஸ்சரைசிங் மிகவும் உதவுகிறது. இது சருமத்தை ஒளிர செய்கிறது. உங்கள் சரும வகைக்கு ஏற்றவாறு மாய்ஸ்சரைசர்களை தேர்ந்தெடுங்கள். எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள சருமங்களுக்கு நீர் சார்ந்த ஜெல் மாய்ஸ்சரைசர்களைத் தேர்வு செய்யலாம்.

5 / 5

சன் ஸ்கிரீன்: சன் ஸ்கிரீன் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பதோடு தோல் புற்றுநோயைத் தடுக்கிறது. வெயில் காலங்கள் மட்டுமில்லாமல் குளிர் காலத்திலும் சன் ஸ்கிரீன் பயன்படுங்கள். தினமும் இதை பயன்படுத்துவதால் நீண்ட நாட்களுக்கு சருமம் பளபளப்பாக இருக்கும்.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!