Diwali: தீபாவளிக்கு டிரஸ் எடுக்க போறீங்களா? – இதை செய்ய மறக்காதீங்க! - Tamil News | Follow these tips to while purchase traditional outfit for this diwali details in tamil | TV9 Tamil

Diwali: தீபாவளிக்கு டிரஸ் எடுக்க போறீங்களா? – இதை செய்ய மறக்காதீங்க!

Published: 

28 Oct 2024 09:30 AM

Traditional Dresses: நமது பாரம்பரிய உடைகளுக்கு என்று ஒரு தனி அழகு. அவை கலாச்சார அடையாளமாக திகழ்வதுடன் நேர்த்தியாகவும் இருக்கும்.‌ ஆனால் பாரம்பரிய உடைகளை அணியும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது உங்கள் தோற்றம் மேம்படும். மேலும் பாரம்பரியத்தை மதிப்பதாகவும் காட்டும். எனவே பாரம்பரிய உடைகளை சரியாக அணிய உதவும் சில குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

1 / 6துணி

துணி வகை: பலரும் செய்யும் ஒரு பொதுவான தவறு சந்தர்ப்பத்திற்கு பொருந்தாத துணியை தேர்ந்தெடுப்பது. பட்டுப் போன்ற கனமான துணிகள் திருமணத்திற்கு சிறந்தவை. ஆனால் சாதாரண நிகழ்வுகளுக்கு அவை ஏற்றவை அல்ல. பருத்தி போன்ற லேசான துணிகளை அன்றாட நிகழ்வுகளுக்கு சிறந்தவை. நீங்கள் அணியும் துணியை தேர்ந்தெடுப்பதற்கு முன் என்ன நிகழ்வு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

2 / 6

ஆடை அளவு: அளவு சரியில்லாத ஆடைகளை அணிவது உங்கள் தோற்றத்தை கெடுக்கும். நீங்கள் அணியும் ஆடை உங்கள் அளவுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பொருத்தமற்ற ஆடைகள் அசவுகரியமாகவும், அழகற்றதாகவும் இருக்கும். நன்கு பொருத்தமான ஆடை உங்கள் தோற்றத்தையும் வசதியையும் மேம்படுத்தும்.

3 / 6

அணிகலன்கள்: ஆடையுடன் நீங்கள் அணியும் அணிகலன்களும் துணை ஆபரணங்களும் உங்கள் பாரம்பரிய தோற்றத்தை மேம்படுத்தலாம். ஆனால் அவற்றை அதிகமாக உபயோகிப்பது எதிர் விளைவை ஏற்படுத்தும். உங்கள் அலங்காரத்தை பூர்த்தி செய்யும் சில முக்கிய பொருட்களை பயன்படுத்தலாம். ஆனால் அதிகப்படியான உபகரணங்கள் உங்கள் தோற்றத்தின் தன்மையை பாதிக்கும். உங்களுடைய உடையின் நேர்த்தியை குறைக்கும்.

4 / 6

காலணிகள்: பாரம்பரிய உடைகள் அணியும்போது காலணி கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன. தவறான காலணிகளை அணிவது உங்கள் முழு தோற்றத் தையும் கெடுத்துவிடும். உங்கள் ஆடைக்கு பொருந்தக்கூடிய, வசதியான காலணிகளை தேர்ந் தெடுத்து அணியவும். பாரம்பரிய உடைகளுடன், சாதாரண காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும்.

5 / 6

சிகை அலங்காரம், ஒப்பனை: நீங்கள் சிகை அலங்காரம், ஒப்பனையுடன்தான். பாரம்பரிய உடை அணிவதை பூர்த்தி செய்ய முடி யும். இந்த விஷயங்களை புறக்கணிப்பது, உங்கள் தோற்றத்தை முழுமையற்றதாக மாற்றும். பங்கேற்கும் நிகழ்வு, அணியும் ஆடைக்கு ஏற்ற சிகை அலங்யும் கவனத்தில் கொள்ள வேண்டும். வெப்பமான காலநிலையில் கனமான துணிகள் சங்கடமானதாக இருக்கும். இதேபோல், குளிர்ந்த காலநிலையில் லேசான துணிகள் பொருத்தமானதாக இருக்காது. எனவே, ஆடை அலமாரியில் இருந்து அணிவதற்கு ஆடையை தேர்ந்தெடுக்கும்போது, வானிலையையும் கவனியுங்கள்.

6 / 6

வண்ணத் தேர்வுகள்: பாரம்பரிய உடைகளில் நிறம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்களுக்குப் பொருந்தாத வண்ணங் களைத் தேர்ந்தெடுப்பது அல்லது ஒன்றுக்கொன்று முரண்படும் வண்ணங்கள் உங்கள் தோற்றத்தைக் கெடுக்கும். உங்கள் நிறம், தோற்றம் அடிப்படையில் உங்களது ஆடைகளின் வண்ணங்களை தேர்ந் தெடுங்கள். அது உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்

உடல் உழைப்பு இல்லையா.. அப்போ இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
உப்பு அதிகம சாப்பிடுவீங்களா? அப்போ இந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது
அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!
இந்த பிரச்சனைகள் இருந்தால் நிச்சயம் ஆப்பிள் பழம் சாப்பிடக்கூடாது..