Kandha Sasti: கந்த சஷ்டி விரதத்தின் போது எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்??? - Tamil News | Foods which do and do not take on kandha sasti viratham detail in tamil | TV9 Tamil

Kandha Sasti: கந்த சஷ்டி விரதத்தின் போது எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்???

Updated On: 

04 Nov 2024 17:07 PM

Kandha Sasti Fasting: கந்த சஷ்டி விரதம் மிக மிக ஒரு எளிமையான, அருமையான, சக்தி வாய்ந்த விரதம். வேண்டும் வரத்தை பெறுவதற்கு இந்த விரதம் உங்களுக்கு பலன் அளிக்கும். கேட்கும் வரத்தையும் உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கும் ஒரு அற்புத சக்திவாய்ந்த தான் இந்த கந்த சஷ்டி விரதம். இந்த கந்த சஷ்டி விரதத்தில் என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5இந்த

இந்த வருடம் நவம்பர் 2ஆம் தேதி சஷ்டி விரதம் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 7ஆம் தேதி சூரசம்ஹாரமும் 8ஆம் தேதி முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும். எனவே தொடர்ந்து இந்த ஏழு நாள் விரதத்தை அனுசரிக்க வேண்டும். பசி பட்டினியோடு ஏழு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் முழு மனதோடு முருகனை நினைத்து இந்த ஏழு நாட்களும் வழிபட்டாலே போதுமானது.கந்த சஷ்டி விரதத்தில் மிளகு விரதம் சற்று கடினமானதாக கருதப்படும்.‌ முதல் நாளில் ஒரு மிளகும் இரண்டாம் நாளில் இரண்டு மிளகும் என்ற கணக்கில் ஏழாவது நாளில் ஏழு மிளகும் சாப்பிட்டு வெறும் தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும்.

2 / 5

 மிளகு விரதம் இருக்க முடியாதவர்கள் ஏழு நாட்களும் மூன்று வேளையும் பால் மற்றும் காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அல்லது இரண்டு வேலை பட்டினி இருந்து ஒரு வேளை மட்டும் உணவருந்திக் கொள்ளலாம். நீங்கள் உணவருந்தும் வேலையை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள் இரண்டு வேளை உணவை எடுத்துக் கொண்டு ஒரு வேளை மட்டும் விரதம் இருக்கலாம்.பால், பழம் வைத்து விரதம் இருப்பவர்கள் பாலாக இருந்தாலும் பழமாக இருந்தாலும் அதை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3 / 5

மதிய வேளையில் மட்டும் உணவு எடுத்துக்கொண்டு விரதத்தை கடைபிடிப்பவர்கள் கண்டிப்பாக பச்சரிசி சாதமும் தயிரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தயிரிலோ சாதத்திலோ கண்டிப்பாக உப்பு சேர்க்க கூடாது. இதை தினமும் கடைபிடிக்க முடியாதவர்கள் சாதத்துடன் ஒரு சைவ உணவை மட்டும் வைத்துக் கொண்டு விரதத்தை மேற்கொள்ளலாம். இதிலும் உப்பு, பூண்டு, வெங்காயம் போன்ற பொருள்களை சேர்க்கக்கூடாது.

4 / 5

உடல்நிலை சரியில்லாதவர்கள் சாப்பிடாமல் தான் விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. முடிந்த அளவு உணவுகளை எடுத்துக்கொண்டு உங்கள் விரதங்களை மேற் கொள்ளலாம்.எல்லா நாட்களும் மூன்று வேளையும் உணவு எடுத்துக்கொண்டு விரதம் கடைப்பிடிப்பவர்கள் கடைசி நாளான சூரசம்காரம் தினத்திலாவது எந்தெந்த உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை கடைப்பிடியுங்கள்.கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக மூன்று வேளையும் உணவு எடுத்துக்கொண்டு விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

5 / 5

துளசி தண்ணீர், நீர்மோர், பானகம் மற்றும் அதிகளவு தண்ணீர் அருந்தி கொள்ளலாம். ஆனால் எலுமிச்சம்பழம் சாறு போன்ற சிட்ரஸ் நிறைந்த பழச்சாறுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். விரத நாட்களில் எக்காரணத்தைக் கொண்டும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

அவரைப் போல இருக்க வேண்டும் - நடிகை பார்வதியின் ஆசை
நயன்தாராவிற்கு சன் டிவியின் இந்த சீரியல் பிடிக்குமாம்
இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?