Pineapple: இந்த பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழம் தொல்லை தரும்.. சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது..! - Tamil News | For those who have this problem, pineapple will give trouble; health tips in tamil | TV9 Tamil

Pineapple: இந்த பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழம் தொல்லை தரும்.. சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது..!

Published: 

10 Nov 2024 18:40 PM

Health Tips: அன்னாசி பழத்தில் வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது எனவே, இந்த பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும்.. அன்னாசிப்பழத்தை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சிலர் இதை தவிர்ப்பது நல்லது.

1 / 6அன்னாசி

அன்னாசி பழத்தில் பல சத்துக்கள் மறைந்துள்ளன. இனிப்பும் புளிப்பும் நிறைந்த இந்த பழத்தின் சுவை பலரால் விரும்பப்படுகிறது. மேலும், இது வைட்டமின் சி தாதுக்களின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமிலைன் என்சைம் செரிமானத்திற்கு உதவுகிறது.

2 / 6

அன்னாசி பழத்தில் வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது எனவே, இந்த பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும்.. அன்னாசிப்பழத்தை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சிலர் இதை தவிர்ப்பது நல்லது.

3 / 6

செலியாக் நோய்: செலியாக் நோய் உள்ளவர்களுக்கு அன்னாசிப்பழம் நல்லதல்ல. அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் எனப்படும் இயற்கையாக நிகழும் என்சைம் உள்ளது. இது செலியாக் நோயின் நிலையை மோசமாக்கும். செலியாக் நோயாளிகள் அன்னாசிப்பழத்தை உட்கொண்டால், அவர்கள் வீக்கம், வலி ​​மற்றும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

4 / 6

வயிறு தொடர்பான பிரச்சனைகள்: வயிற்றுப் புண் அல்லது அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்களுக்கும் அன்னாசிப்பழம் பிரச்சனையை தரும். இதை எடுத்துக்கொள்வதால் அவர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குறிப்பாக இரவில் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

5 / 6

சிறுநீரக நோய்: ஒரு நாளைக்கு வைட்டமின் சி-யின் உச்ச வரம்பு 200 மி.கி ஆகும். அதிக அளவு வைட்டமின் சி உட்கொள்வது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, சிறுநீரகங்கள் பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

6 / 6

சர்க்கரை நோய்: அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம். சர்க்கரை நோயாளிகள் இதனை உட்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உங்கள் உடல்நிலை திடீரென மோசமடையலாம். சர்க்கரை நோயாளிகள் அன்னாசிப்பழத்திற்கு பதிலாக மற்ற பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!