Mamallapuram: இன்று இலவச அனுமதி.. மாமல்லபுரத்துக்கு படையெடுக்கும் மக்கள்! - Tamil News | free admission to tourists in mamallapuram due to World Heritage Week 2024 | TV9 Tamil

Mamallapuram: இன்று இலவச அனுமதி.. மாமல்லபுரத்துக்கு படையெடுக்கும் மக்கள்!

Published: 

19 Nov 2024 06:56 AM

World Heritage Week 2024: ஒவ்வொரு வருடமும் நவம்பர் 3வது வாரமான 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வரலாற்றில் இந்தியாவை பசைசாற்றும் பாரம்பரிய மிக்க இடங்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இலவச அனுமதி உள்ளிட்ட பல விஷயங்கள் செயல்படுத்தப்படுவது வழக்கமாகும்.

1 / 6உலக

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு புகழ்பெற்ற சுற்றுலாதலமான மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை இன்று ஒருநாள் பயணிகள் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 / 6

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இந்தியாவில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் பொருட்டு மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

3 / 6

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கியது. முன்பு மகாபலிபுரம் என அனைவராலும் அழைக்கப்பட்டது.

4 / 6

தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மாமல்லபுரம் பல்லவ மன்னர்களின் சிற்பக் கலைக்கு பெயர் பெற்றது. இங்கு கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம்,ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை ஆகிய இடங்கள் உள்ளது.

5 / 6

உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் தினசரி அதிகளவும் மாமல்லபுரத்துக்கு வருகை தந்து சிற்பக்கலையைப் பற்றி அறிந்து வியந்து போகிறார்கள். அருகிலேயே கிழக்கு கடற்கரையும் உள்ளதால் குடும்பத்துடன் பலரும் வருகை தருகிறார்கள்.

6 / 6

மற்ற நாட்களில் வரும் உள்ளூர் மக்களுக்கு ரூ.40ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இன்று இலவசம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை..!
ஆஸ்திரேலியாவில் கேப்டனாக அதிக சதம் அடித்த இந்தியர்..!
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும் வேலையா?