Travel: கோவா செல்ல போகிறீர்களா..? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க! - Tamil News | goa tour explore goa hidden tourist places list | TV9 Tamil

Travel: கோவா செல்ல போகிறீர்களா..? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

Published: 

26 Jul 2024 13:43 PM

Goa Travel: கோவா மாநிலத்தின் எல்லைகள் மகாராஷ்டிராவிலிருந்து வடக்கு தெரேகோல் நதியிலும், கிழக்கு மற்றும் தெற்கில் கர்நாடகா மாநிலத்தாலும், மேற்கில் அரபிக்கடலாலும் பிரிக்கப்படுகின்றன. கோவா இந்தியாவிலேயே அதிகம் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகும். இருப்பினும், நீங்களும் கோவாவிற்கு ஒரு பயணத்தைத் திட்டமிட்டு, முதல் முறையாகச் செல்கிறீர்கள் என்றால், இந்த இடங்களை மறக்காமல் தெரிந்து கொண்டு செல்லுங்கள். இது உங்கள் பயணத்திற்கு உதவியாக இருக்கும்.

1 / 7கோவா

கோவா இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. கோவா மாநிலத்தின் எல்லைகள் மகாராஷ்டிராவிலிருந்து வடக்கு தெரேகோல் நதியிலும், கிழக்கு மற்றும் தெற்கில் கர்நாடகா மாநிலத்தாலும், மேற்கில் அரபிக்கடலாலும் பிரிக்கப்படுகின்றன.

2 / 7

இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று கோவா. இங்கு அழகிய கடற்கரைகள், அருங்காட்சியங்கள், போர்த்துகீசிய கட்டிடங்கள் பார்க்கவே பிரமிப்பை ஏற்படுத்தும். இங்கு நீங்கள் சென்று பார்க்க சில இடங்கள் உள்ளன.

3 / 7

சோர்லா காட்: கோவாவின் சோர்லா காட் ஒரு மலை வாசஸ்தலம். இது பார்க்கவே மிக அழகாக காட்சியளிக்கும். சோர்லா காட் மலை பகுதி கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சி மற்றும் பசுமையான காடுகளை ஒருமுறையாவது சென்று பாருங்கள்.

4 / 7

திவார் தீவு: திவார் தீவு என்பது பனாஜிக்கு அருகில் மண்டோவி ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு ஆகும். இங்கு அழகிய தேவாலயங்கள் மற்றும் பாரம்பரிய வீடுகளுக்கு பெயர் பெற்றது.

5 / 7

அர்வலேம் குகைகள்: அர்வலேம் குகைகள் சங்கேலிம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான பாறை வெட்டப்பட்ட குகைகள் உள்ளது. இவை 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அழகிய சிற்பங்களுக்கு பெயர் பெற்றது அர்வலேம் குகைகள்.

6 / 7

தம்ப்டி சுர்லா: கோவாவின் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள ஒரு வினோதமான கிராமம் தம்ப்டி சுர்லா. அங்கு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான தம்ப்டி சுர்லா சிவன் கோயில் உள்ளது.

7 / 7

கோவாவில் முதலில் வடக்கு கோவாவில் தொடங்கி, செண்ட்ரல் கோவா, தெற்கு கோவா மற்றும் கண்டோலியம் பகுதிகளுக்கு செல்லலாம்.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version