5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price October 18 2024: மீண்டும் புதிய உச்சம்.. எட்டாக்கனியாய் மாறும் தங்கம்.. அதிர்ச்சியில் மக்கள்..

இந்தியா உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கம் கைகொடுக்கிறது. அதனைக் கொண்டு வர்த்தகம் செய்து பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 18 Oct 2024 09:53 AM

1 / 6
பொதுவாக  பொருளாதார ரீதியாக சமூகத்தில் எந்தவித வித்தியாசமில்லாமல் அனைத்து வயதினருக்கும் பலவித ஆபரணங்கள் இருந்தாலும் தங்கம் மீது  அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட முனைவதில்லை. தங்கமும் பலவிதமான சேமிப்பு திட்டம் மூலம் சேகரிக்கப்படுகிறது.

2 / 6
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் வருகிறது. அதன்படி, நேற்று அக்டோபர் 17 ஆம் தேதியான நேற்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.57,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.20 அதிகரித்து ரூ.7,160-க்கு விற்பனையானது.

3 / 6
இந்த நிலையில், அக்டோபர் 18ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.57,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து ரூ.7,240-க்கு விற்பனையாகிறது.

4 / 6
24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.61,560 ஆகவும் கிராம் ரூ. 7,695 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

5 / 6
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.105.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,05,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

6 / 6
Latest Stories