Gold Price September 21 2024 : எட்டாக் கனியாய் மாறும் தங்கம்..அதிரடியாக உயர்ந்த விலை.. சவரனுக்கு இவ்வளவா? - Tamil News | gold and silver price today 21 september thangam and velli rate in chennai bengaluru kolkata delhi and mumbai check prices | TV9 Tamil

Gold Price September 21 2024 : எட்டாக் கனியாய் மாறும் தங்கம்..அதிரடியாக உயர்ந்த விலை.. சவரனுக்கு இவ்வளவா?

Published: 

21 Sep 2024 09:57 AM

தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். அத்தகைய தங்கத்தின் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.

1 / 6தங்கம்

தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

2 / 6

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

3 / 6

செப்டம்பர் 20 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.480 உயர்ந்து ரூ.55,080-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 உயர்ந்து ரூ.6,885-க்கு விற்பனையானது.

4 / 6

செப்டம்பர் 21 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கு விற்பனையாகிறது.

5 / 6

24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.59,320 ஆகவும் கிராம் ரூ. 7,415 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து சவரன் ரூ. 55 ஆயிரம் கடந்து விற்பனையாகிறது.

6 / 6

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.98.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.98,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Follow Us On
கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்..
பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
Exit mobile version