Gold Price October 26, 2024: வாரத்தின் இறுதி நாள்.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ரூ.59,000 நெருங்கும் நிலை.. - Tamil News | gold and silver price today 26 October thangam and velli rate in Chennai Bengaluru Kolkata Delhi and Mumbai check price details here | TV9 Tamil

Gold Price October 26, 2024: வாரத்தின் இறுதி நாள்.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ரூ.59,000 நெருங்கும் நிலை..

Updated On: 

26 Oct 2024 10:02 AM

இந்தியா உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைப்பதில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கம் கைகொடுக்கிறது. அதனைக் கொண்டு வர்த்தகம் செய்து பிற நாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமான வணிகமாக பார்க்கப்படுகிறது.

1 / 6பொதுவாக

பொதுவாக பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் சமூகத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் பலவித ஆபரணங்கள் மீது ஈர்ப்பு என்பது உள்ளது. ஆனால் அனைத்தையும் விட தங்கம் மீதான ஈர்ப்பு மேலானது. அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட முயற்சிப்பதில்லை. தங்கமும் பலவிதமான சேமிப்பு திட்டம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

2 / 6

இந்தியா உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைப்பதில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கம் கைகொடுக்கிறது. அதனைக் கொண்டு வர்த்தகம் செய்து பிற நாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமான வணிகமாக பார்க்கப்படுகிறது.

3 / 6

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டும் வருகிறது. அதன்படி, நேற்று அக்டோபர் 25 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.58,360 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 அதிகரித்து ரூ.7,295க்கு விற்பனையானது.

4 / 6

இப்படியான நிலையில், அக்டோபர் 26ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.58,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.65 அதிகரித்து ரூ.7,360க்கு விற்பனையாகிறது

5 / 6

24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.62,920 ஆகவும் கிராம் ரூ. 7,865 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

6 / 6

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.107.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,07,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

காலை வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்கள்.. அற்புதமான பலன் கிடைக்கும்
வாசனை திரவியம் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா?
நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
மழைக்காலத்தில் அதிகளவு நன்மை தரும் மிளகு..!