Gold Price October 03 2024: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் நிலை.. - Tamil News | gold and silver price today 3 october thangam and velli rate in chennai bengaluru kolkata delhi and mumbai check price details here | TV9 Tamil

Gold Price October 03 2024: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் நிலை..

Published: 

03 Oct 2024 10:09 AM

இன்றைய தங்கம் விலை: சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை குறைந்த இருந்த நிலையில், கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தின் 3 ஆம் தேதியான இன்று தங்கம் விலை நிலவரம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

1 / 6ஆபரணங்கள்

ஆபரணங்கள் மீது பொதுவாகவே அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஈடுபாடு உள்ளது. இதில் தங்கம் என்றும் தனி ரகம் தான். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட முனைவதில்லை.

2 / 6

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிரச்னைகளும் சரி செய்யப்படுகிறது.

3 / 6

முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் கண்டு உச்சம் தொட்டு வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனை செய்யப்பட்டது.

4 / 6

இந்நிலையில் அக்டோபர் 3ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,110க்கு விற்பனையாகிறது.

5 / 6

அதேசமயம் 24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.60,520 ஆகவும் கிராம் ரூ. 7,565 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

6 / 6

அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு எந்தவித விலை மாற்றமுமின்றி ரூ.101.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version