24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.63, 560 ஆகவும், கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.7,945 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்த வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தீபாவளி நெருங்கும் சூழலில், தங்கம் விலை உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.