Gold Price October 04 2024: உச்சத்தில் தங்கம் விலை… ஒரு சவரன் இவ்வளவா? உடனே செக் பண்ணுங்க! - Tamil News | gold and silver price today 4th october thangam and velli rate in chennai bengaluru kolkata delhi and mumbai check price details here | TV9 Tamil

Gold Price October 04 2024: உச்சத்தில் தங்கம் விலை… ஒரு சவரன் இவ்வளவா? உடனே செக் பண்ணுங்க!

Updated On: 

04 Oct 2024 09:55 AM

இன்றைய தங்கம் விலை: சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.  கடந்த சில மாதங்களாக தங்கம் விலை குறைந்த இருந்த நிலையில், கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது. இந்த நிலையில், மாதத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை நிலவரம் என்ன என்பதை பற்றி பார்ப்போம். இதனை தெரிந்து கொண்டு நகையை வாங்குவது சரியான நேரமா என்பதை அறிந்து கொள்ளுங்கள்

1 / 6பொதுவாக

பொதுவாக பலவித ஆபரணங்கள் இருந்தாலும் தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைத்து வயதினருக்கும் அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட முனைவதில்லை.

2 / 6

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

3 / 6

முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வருகிறது. கடந்த அதன்படி, அக்டோபர் 3ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,110-க்கு விற்பனையானது.

4 / 6

இந்த நிலையில், அக்டோபர் 4ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,120-க்கு விற்பனையாகிறது.

5 / 6

24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.60,040 ஆகவும் கிராம் ரூ. 7,575 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

6 / 6

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.103.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,03,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version