இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா ஆரண்ய காண்டம், மார்டன் லவ் சென்னை மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் சூப்பர் டீலக்ஸ் படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது நடிகர் மணிகண்டனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது நடிகர் மணிகண்டன் "குடும்பஸ்தன்" என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில், இந்த திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.