ரெடியான மணிகண்டனின் அடுத்த படம்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்! - Tamil News | Good Night Movie famous Actor K Manikandan Starring New movie Update | TV9 Tamil

ரெடியான மணிகண்டனின் அடுத்த படம்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Published: 

14 Dec 2024 21:53 PM

Actor Manikandan New Movie Update :தமிழ்த் திரைப்படங்களில் வளர்ந்து வரும் நடிகர்களில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் மணிகண்டன். ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவருக்கு குட் நைட் திரைப்படம் சிறந்த அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில் இவர் தற்போது நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

1 / 5தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றிவருபவர் கே. மணிகண்டன். ஆரம்பத்தில் "இந்தியா பாகிஸ்தான்" என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகினார். இப்படத்தைத் தொடர்ந்து திரைப்படங்களில் பல மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடித்து  மிகவும் பிரபலமாகினார்.

தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றிவருபவர் கே. மணிகண்டன். ஆரம்பத்தில் "இந்தியா பாகிஸ்தான்" என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகினார். இப்படத்தைத் தொடர்ந்து திரைப்படங்களில் பல மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் பிரபலமாகினார்.

2 / 5

இந்நிலையில் தொடர்ந்து நடிப்பின் மீது ஆர்வம் காட்டிய இவருக்கு "ஜெய் பீம்" திரைப்படத்தில் "ராஜா கண்ணு" என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தை அடுத்தாக இவருக்குத் தனி திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து. அதில் 'குட் நைட்' என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

3 / 5

இதனைத் தொடர்ந்து 'லவ்வர்' திரைப்படத்தில் மாறுபட்ட தற்போது உள்ள காலத்தின் காதல் கதையில் அருமையாக நடித்திருந்தார். தனது இயல்பான நடிப்பினால் பிரபலமான இவருக்குப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

4 / 5

தொடர்ந்து திரைப்படங்களில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் மணிகண்டன் தற்போது, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் மணிகண்டன் மாறுபட்ட கதைக்களத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

5 / 5

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா ஆரண்ய காண்டம், மார்டன் லவ் சென்னை மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் சூப்பர் டீலக்ஸ் படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது நடிகர் மணிகண்டனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது நடிகர் மணிகண்டன் "குடும்பஸ்தன்" என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில், இந்த திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

புடவையில் சொக்க வைக்கும் நடிகை மாளவிகா மோகனன்
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில முக்கிய பழக்கங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!