5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆதார் திருத்தம் செய்ய புது அப்டேட்.. அரசு கொடுத்த புதிய அறிவிப்பு!

Aadhaar Update: பயண சீட்டு முன்பதிவு செய்வதிலிருந்து வங்கி கணக்கு தொடங்குவது வரை தற்பொழுது ஆதார் அவசியமாகிவிட்டது. அரசு சார்ந்த பல சேவைகளை பெறுவதற்கு இந்த ஆதார் ஒரு முக்கிய ஆவணம். இது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசால் வழங்கப்படும் அங்கீகாரம்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 25 Oct 2024 09:04 AM
இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் அட்டை தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு மொத்தம் 13,352 ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்கள் தேசம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை புதுப்பிப்பதில் மக்கள் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருவதால் அதிலிருந்து விடுபட தபால் நிலையங்களிலும் ஆதார் தொடர்பான சேவைகளை பெற முடியும் என இந்தியா போஸ்ட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

1 / 5
ஆதார் மையம் குறைவாக இருப்பதால் ஆதாரை புதுப்பிப்பதற்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை தடுக்கவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டு அஞ்சல் துறையும் ஆதார தொடர்பான சேவைகளை வழங்க தொடங்கியுள்ளது.‌ இதன் அடிப்படையில் இங்கு ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவைகள் வழங்கப்படுகிறது என்று தபால் துறையின் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

2 / 5
அந்த அறிவிப்பின்படி தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் என இரண்டு வகையான சேவைகள் வழங்கப்படும். ஆதார் பதிவில் மக்களின் பயோமெட்ரிக் தகவலை மின்னணு முறையில் பதிவு இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.  ஆதார் புதுப்பித்தளில் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் கருவிழி பிழை இருந்தாலோ அல்லது காலாவதியாகி இருந்தாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

3 / 5
இந்த சேவையை இந்தியா முழுவதும் உள்ள 13,352 மையங்களில் பெறலாம். இந்த சேவையை எந்த தபால் நிலையங்களில் பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ள இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.indiapost.gov.in/ என்ற பக்கத்தில் காண முடியும்.

4 / 5
ஆதாரை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பரிந்துரைக்கிறது. தற்பொழுது ஆதார் தொடர்பான மோசடிகள் அதிகம் நடந்து வரும் சூழ்நிலையில், தடுப்பதற்கு பத்து வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்கள் தங்களின் புதிய விவரங்களை புதுப்பிக்குமாறு வலியுறுத்தப் படுகிறது.

5 / 5
Latest Stories