Smriti Mandhana: நேஷனல் க்ரஷ் ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று..! - Tamil News | Happy Birthday Smriti Mandhana | TV9 Tamil

Smriti Mandhana: நேஷனல் க்ரஷ் ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று..!

Updated On: 

18 Jul 2024 14:31 PM

Smriti Mandhana Birthday: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த இந்திய பெண் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனையை வெறும் 51 இன்னிங்ஸ்களில் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இதுபோக, பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆவார்.

1 / 6இந்திய

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஸ்மிருதி மந்தனா தனது பிரத்யேக பேட்டிங் மற்றும் அழகான ரியாக்‌ஷன்களால் அதிகபடியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.

2 / 6

சமீபத்திய ஆண்டுகளில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இணையான பெயரை, பெண்கள் கிரிக்கெட் அணியும் பெற்றுள்ளது. அதற்கு ஸ்ம்ருதி மந்தனாவும் ஒரு காரணம்.

3 / 6

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். மொத்தம் 7 சதங்கள் அடித்ததன் மூலம் ஸ்மதி மந்தனா, முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் (7 சதம்) சாதனையை சமன் செய்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

4 / 6

ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஹோபார்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி 109 பந்துகளில் 102 ரன்களும், டெஸ்டில் 216 பந்துகளில் 127 ரன்களும் எடுத்தார்.

5 / 6

பெண்கள் ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். 2024ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 இன்னிங்ஸ்களில் 343 ரன்கள் குவித்ததன் மூலம் ஸ்மிருதி இந்த சாதனையை படைத்தார்.

6 / 6

ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற முதல் இந்திய நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா. இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் இரண்டாவது வீராங்கனையும் ஆவார். இதற்கு முன், அவுஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி, இரண்டு முறை ஐசிசி மகளிர் சிறந்த வீராங்கனை விருதை வென்றார். 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்த விருதுகளைப் பெற்றதன் மூலம் பெர்ரியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா சமன் செய்தார்.

Follow Us On
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version