Almond Tea: சத்துகள் நிறைந்த பாதாம் டீ.. ஈசியா செய்ய வழிமுறை இதோ! - Tamil News | Health Benefits of Almond Tea and how to make badam tea recipes, health tips in tamil | TV9 Tamil

Almond Tea: சத்துகள் நிறைந்த பாதாம் டீ.. ஈசியா செய்ய வழிமுறை இதோ!

Published: 

06 Sep 2024 12:27 PM

Badam Tea Recipes: தினமும் காலை எழுந்ததும் பெரும்பாலான மக்கள் டீ, காபி குடிக்கின்றனர். சிலர் மூலிகை பானங்களையும் அருந்துகின்றனர். சிலர் தண்ணீரில் ஊறவைத்த ஐந்தாறு பாதாம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வழக்கமாக குடிக்கும் டீயை விட காலையில் பாதாம் டீயை எடுத்துக் கொண்டால் மேலும் ஊட்டச்சத்து தேடி வரும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, வழக்கமான டீக்கு பதிலாக பாதாம் டீ குடிப்பது நல்லது

1 / 5பாதாம்

பாதாம் டீ என்ற பெயரைக் கேட்டால் ஆச்சரியப்படுகிறீர்களா? வழக்கமான தேநீரை விட பாதாம் டீ மிகவும் ஆரோக்கியமானது. இந்த டீயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பாதாம் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம். பாதாமில் வைட்டமின் ஏ, ஈ, பி2 மற்றும் மெக்னீசியம் உள்ளது. அவை தேநீரிலும் காணப்படுகின்றன.

2 / 5

பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. பாதாம் டீ குடிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும். தவிர, இந்த டீயில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

3 / 5

பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. பாதாம் டீ குடிப்பதால் சருமத்தின் நெகிழ்ச்சி அதிகரிக்கும். பாதாம் டீயில் ரிபோஃப்ளேவின் மற்றும் எல்-கார்னைடைன் போன்ற பொருட்களும் உள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

4 / 5

பாதாம் டீ செய்வது எப்படி.. சில பாதாம் பருப்பை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். மிக்ஸியில் பாதாம் சேர்த்து பாதாம் பால் தயார். அதன் பிறகு, இந்த பாதாம் பாலை சூடாக்க வேண்டும்.

5 / 5

இப்போது பாலில் சிறிதளவு டீ டிகாக்ஷன், ஏலக்காய்த்தூள், தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து மெல்லியதாக கொதிக்க வைத்து பாதாம் டீ தயார். இந்த பாதாம் டீயை அதிகாலையில் குடித்து உங்கள் நாளைத் தொடங்கலாம்

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version