Health Tips: தினமும் ஒரு பச்சை ஆப்பிள்.. உடலுக்கு கிடைக்கும் இரட்டிப்பு பலன்கள்..! - Tamil News | Health benefits of eating a green apple daily; health tips in tamil | TV9 Tamil

Health Tips: தினமும் ஒரு பச்சை ஆப்பிள்.. உடலுக்கு கிடைக்கும் இரட்டிப்பு பலன்கள்..!

Published: 

22 Nov 2024 22:52 PM

Green Apple Benefits: பச்சை ஆப்பிளில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும்.

1 / 6பச்சை

பச்சை ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பழங்களில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் உடலில் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது

2 / 6

பச்சை ஆப்பிளில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

3 / 6

பச்சை ஆப்பிள்களில் அதிகளவும் நார்ச்சத்து உள்ளது. குறிப்பாக, பெக்டின் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை பராமரிக்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

4 / 6

பச்சை ஆப்பிள்களில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையை அகற்ற உதவுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு செயல்பாடு, தோல் ஆரோக்கியம் மற்றும் திசு சரிசெய்தல் ஆகியவற்றை சீராக இயங்க உதவுகிறது.

5 / 6

பச்சை ஆப்பிளில் உள்ள குர்செடின் மற்றும் கேடசின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. புற்றுநோய் மற்றும் நரம்பியக்கடத்தல் கோளாறுகள் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

6 / 6

பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும், ஆப்பிள்களை தினந்தோறும் தவறாமல் எடுத்து கொள்வது இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!