Jack Fruits Seed: பலாக் கொட்டையை தூக்கி வீசாதீங்க.. அதுவுல அப்படி ஓர் சத்து இருக்கு! - Tamil News | Health benefits of eating jack fruit seeds | TV9 Tamil

Jack Fruits Seed: பலாக் கொட்டையை தூக்கி வீசாதீங்க.. அதுவுல அப்படி ஓர் சத்து இருக்கு!

Updated On: 

29 Nov 2024 14:11 PM

Benefits of eating jack Fruit Seeds: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் சுவையும் அதன் மணமும் வெகு தொலைவில் இருந்தாலும் நம்மை ஈர்த்து விடும். பெரும்பாலும் அனைவரும் பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் பலர் பலாப்பழ கொட்டைகளை வீசி விடுவார்கள். ஆனால் அந்த கொட்டைகளில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதன் பலன்களை தெரிந்திருந்தால் நீங்கள் இனிமேல் பலாப்பழ கொட்டைகளை கீழே போட மாட்டீர்கள். அவற்றில் இருக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5பலாப்பழ விதைகளில் புரதங்கள், நார்ச்சத்து, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளன. பப்பாளி விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பலாப்பழ விதைகளில் புரதங்கள், நார்ச்சத்து, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளன. பப்பாளி விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

2 / 5

பலாப்பழ விதையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்க இது உதவுகிறது. பலாப்பழ விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

3 / 5

பலாப்பழ விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. பலாப்பழ விதையில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான தாதுக்கள். பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்த்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. பலாப்பழ விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

4 / 5

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பலாப்பழ விதைகளை உட்கொள்வது நல்ல பலனைத் தரும். ஏனெனில் பலாப்பழ விதையில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இது எடை குறைக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான உணவை தடுக்கிறது. பலாப்பழ விதையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

5 / 5

பலாப்பழ விதையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க டிப்ஸ்