Health Tips: ஸ்பூனை தூக்கி போடுங்க.. கைகளால் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? - Tamil News | Health tips Benefits of eating with hand details in Tamil | TV9 Tamil

Health Tips: ஸ்பூனை தூக்கி போடுங்க.. கைகளால் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Published: 

26 Nov 2024 08:00 AM

Eating by hand: பெரும்பாலும் அனைவரும் தரையில் அமர்ந்து சம்மனமிட்டு கைகளால் சாப்பிடும் பழக்கமுடையவர்கள். இந்த பழக்கம் நான் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய பழக்கம். ஆனால் மேற்கத்திய கலாச்சாரம் உலகெங்கிலும் பரவி வருவதால் அதேபோல நாமும் கரண்டியில் உணவுகளை உண்ண பழகி வருகிறோம்.

1 / 5பழங்கால

பழங்கால பாரம்பரிய உணவிற்கும் இன்றைய வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக நாம் கையால் உணவுகளை சாப்பிடுவோம். ஆனால் மேற்கத்திய கலாச்சார முறையான கரண்டியால் சாப்பிடும் பழக்கம் இன்று நம் நாட்டிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. கைகளால் சாப்பிடுவதை விட கரண்டிகளால் சாப்பிடுவது நாகரீகம் என கருதப்படுகிறது. ஆனால் கைகளால் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

2 / 5

ஆயுர்வேதத்தின் படி கைகளால் உணவை உண்பது நமது செரிமான சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உணவை விரல்களால் தொடும்போது நாம் சாப்பிட ஆரம்பிக்கிறோம் என்ற செய்தி மூளைக்கு அனுப்பப்படும். இந்த சமிக்கைகள் காரணமாக வயிறு மற்றும் செரிமான அமைப்பு உறுப்புகள் வேலை செய்ய தயாராகிறது.

3 / 5

கைகளால் உணவு உட்கொள்வது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் கைகளால் சாப்பிடும் போது விரல்கள் மற்றும் கை தசைகள் நன்றாக இயங்குகிறது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

4 / 5

கைகளால் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.‌ உங்கள் கைகளால் உணவை உண்பதால் சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை உடலுக்குள் கொண்டு செல்கிறது. இந்த பாக்டீரியாக்கள் உடலில் ஏற்படும் சில நோய்கிருமி தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.

5 / 5

கையால் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை குறைக்கிறது. உணவின் கிளைசெமி குறியீடு கட்டுப்படுத்தப்படுகிறது. கைகளால் சாப்பிடுவதால் வயிறு நிரம்புவது மட்டுமல்லாமல் உணவை ரசித்து உண்ணவும் முடியும் என்கிறார்கள்‌ அதனால் கையால் உணவு உண்பது மனதிருப்திக்கு வழிவகுக்கும் என பல ஆய்வுகள் தெரிவித்துள்ளது.‌

காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!
பால் காஃபி அல்லது பிளாக் காஃபி... எது நல்லது?
நடிகை கயல் ஆனந்தியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்..!