Beauty Tips: முகத்தில் இயற்கையான பொலிவு நிலைத்திருக்க வேண்டுமா..? தினமும் இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்..! - Tamil News | healthy skin and increase natural glow five things daily in life know details in tamil | TV9 Tamil

Beauty Tips: முகத்தில் இயற்கையான பொலிவு நிலைத்திருக்க வேண்டுமா..? தினமும் இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்..!

Published: 

20 Oct 2024 18:52 PM

Beauty Care: மாசு, தூசி மற்றும் அழுக்கு போன்றவற்றால் பல சரும பிரச்சனைகள் ஏற்படுவதால், முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவ வேண்டும். சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாகவும், வியர்வை அதிகமாகவும் இருந்தால், முகத்தை மூன்று முறை கழுவலாம்.

1 / 6பெரும்பாலான

பெரும்பாலான மக்கள் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இயற்கையாகவே உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க, தினமும் இந்த 5 விஷயங்களை செய்தாலே போதுமானது.

2 / 6

உங்கள் உடலில் உள்ள நகங்கள், தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்ப்பது முக்கியம். பாதாம், ஹேசல்நட்ஸ், பருப்புகள் வகைகள் போன்றவற்றை ஊறவைத்து தினமும் சாப்பிட்டால், சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.

3 / 6

தினமும் குறைந்தது 7 அல்லது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. பெரும்பாலும் இதை நம்மால் செய்ய முடியாது. எனவே தேங்காய் தண்ணீர், எலுமிச்சை ஜூஸ் போன்ற ஆரோக்கியமான பானங்கள் உங்கள் தினசரி எடுத்து கொள்ளுங்கள். இது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரும்.

4 / 6

மாசு, தூசி மற்றும் அழுக்கு போன்றவற்றால் பல சரும பிரச்சனைகள் ஏற்படுவதால், முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவ வேண்டும். சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாகவும், வியர்வை அதிகமாகவும் இருந்தால், முகத்தை மூன்று முறை கழுவலாம்.

5 / 6

வெயிலில் செல்லும்போது அதிலிருந்து வெளிவரும் ற ஊதா கதிர்கள் சருமத்தை சேதப்படுத்துகின்றன. இது உங்கள் முகத்தில் விரைவில் சுருக்கங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். சன்ஸ்கிரீன் வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.

6 / 6

தூங்க செல்வதற்கு முன் உங்கள் முகத்தை கழுவுங்கள். அதன் பிறகு சருமத்தை ஒரு நல்ல க்ளென்சர் மூலம் சுத்தம் செய்து, பின்னர் டோனரைப் பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து, சில நிமிடங்களுக்குப் பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!