Millets: சிறுதானியம் சாப்பிடுபவர்களுக்கு சில ஆரோக்கிய குறிப்புகள்… - Tamil News | Healthy Tips for the people who are eating millet details in tamil | TV9 Tamil

Millets: சிறுதானியம் சாப்பிடுபவர்களுக்கு சில ஆரோக்கிய குறிப்புகள்…

Published: 

21 Oct 2024 16:19 PM

Millets Tips: சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் முக்கியப் வகித்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. சத்துகள் நிறைந்த சிறுதானியங்களின் சிறப்பை தற்போது பலரும் உணர்ந்துவருகிறார்கள். விரும்பி உண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.அதேநேரம், புதிதாக சிறுதானியங்களை உண்போர், பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

1 / 5சிறுதானியங்களை

சிறுதானியங்களை முதன்முதலாக பயன்படுத்தும்போது, தனித்தனியாக சமைத்துச் சாப்பிடவும். வீட்டில் யாருக்காவது ஒவ்வாமை ஏற்பட்டால் கண்டறிய எளிதாக இருக்கும். எல்லா சிறுதானியங்களும் ஒத்துக் கொண்ட பின், கலந்த சிறுதானியங்களை பயன்படுத்தவும். தோல் அரிப்பு, ஒவ்வாமை உள்ளவர்கள் கம்பு, சோளம், வரகு சாப்பிடக் கூடாது.

2 / 5

சிறுதானியங்களை மாவாக அரைக்க, முதலில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் தண்ணீரை வடித்துவிட்டு, நிழலில் உலர விடவும். பிறகு மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆற விடவும்.அதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

3 / 5

பொதுவாகவே சிறுதானியங்களில் கல், மண் நிறைய இருக்கும். எனவே, நன்கு சுத்தம் செய்த பின்பே பயன்படுத்த வேண்டும்.முதன்முதலாக சிறுதானியங்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது, வாரத்துக்கு 2 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வரவும். பின்பு படிப்படியாக நாட்களை அதிகரிக்கவும்.

4 / 5

வயதானவர்களுக்கு சிறு தானிய உணவுகளை சாப்பிடக் கொடுக்கும்போது, கூடுதல் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் குழைவாக வேகவைக்க வேண்டும். இப்படிச் செய்வதால்,சாப்பிட்ட பின்பு அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

5 / 5

சிறுதானியங்கள் எல்லாவற்றிலும் நம் உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றை நாம் சாப்பிடும்போது சத்துகள் கிடைப்பது மட்டுமின்றி, உடல் இடை குறையவும், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?