Sabarimala: சபரிமலை கோயில் போகலாமா? – மழை நிலவரம் எப்படி இருக்கு? - Tamil News | | TV9 Tamil

Sabarimala: சபரிமலை கோயில் போகலாமா? – மழை நிலவரம் எப்படி இருக்கு?

Published: 

26 Nov 2024 13:29 PM

Kerala Weather: சபரிமலையில் இப்போது சீசன் காலம் என்பதால் பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில் மழை நிலவரம் அங்கு எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

1 / 6கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

2 / 6

சபரிமலையில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 26 ஆம் தேதி வரை மண்டல பூஜை காலமாகும். இதற்காக கோயில் நடை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது.

3 / 6

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலம் சபரிமலையில் சீசன் காலமாகும். இந்த காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள். ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

4 / 6

இதனிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த இரண்டு நாட்களுக்குள் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு-இலங்கை கடற்கரையை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

5 / 6

இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் பத்தினம் திட்டாவில் சபரிமலை இருக்கிறது.

6 / 6

எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் மழை மற்றும் அதிகப்படியான பனியை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிய பாதுகாப்போடு கவனமாக மலை ஏற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் குடை, கம்பளி போன்ற உபகரணங்களுடன் செல்லுங்கள்

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!