ரூ.100 இருக்கா? லட்சங்களில் ரிட்டன்.. டாப் ப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் ரெடி! | Here are the top 5 returning flexi cap funds Tamil news - Tamil TV9

ரூ.100 இருக்கா? லட்சங்களில் ரிட்டன்.. டாப் ப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் ரெடி!

Published: 

29 Nov 2024 17:52 PM

Flexi Cap Mutual Funds: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில, ப்ளெக்ஸி ஃபண்டுகள் ஓர் வகை ஆகும். இந்தப் ஃபண்டுகளில் டாப் ரிட்டன் கொடுத்த ஃபண்டுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் ஃபண்டுகளின் டாப் ரிட்டன் மற்றும் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி முதலீடு குறித்து பார்க்கலாம்.

1 / 8ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் என்பது ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஆகும். பொதுவாக, ஃப்ளெக்ஸி-கேப் ஃபண்டு நிதி மேலாளருக்கு அதிக முதலீட்டுத் தேர்வுகளை வழங்குகிறது. இதனால், இதில் வருவாய் அதிகம் கிடைக்கிறது. நாம் தற்போது கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ரிட்டன் கொடுத்த 5 ப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.

ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் என்பது ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஆகும். பொதுவாக, ஃப்ளெக்ஸி-கேப் ஃபண்டு நிதி மேலாளருக்கு அதிக முதலீட்டுத் தேர்வுகளை வழங்குகிறது. இதனால், இதில் வருவாய் அதிகம் கிடைக்கிறது. நாம் தற்போது கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ரிட்டன் கொடுத்த 5 ப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.

2 / 8

குவாண்ட் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 23.83 சதவீதம் ரிட்டன் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,000 ஆகவும், லம்ப்சம் முதலீடு ரூ.5 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 / 8

ஜே.எம். பிளெக்ஸி கேப் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 22.42 சதவீதம் வருவாய் அளித்துள்ளது. இதில், குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி மற்றும் லம்ப்சம் முதலீடு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 / 8

பராக் பாரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 21.44 சதவீதம் வருவாய் கொடுத்துள்ளது. இதில் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி மற்றும் லம்ப்சம் முதலீடு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 / 8

ஹெச்.டி.எஃப்.சி ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 20.23 சதவீதம் ரிட்டன் அளித்துள்ளது. இதில் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி மற்றும் லம்ப்சம் முதலீடு ரூ.100 ஆகும்.

6 / 8

360 ஒன் ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 20.27 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. இதன் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி மற்றும் லம்ப்சம் முதலீடு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7 / 8

இதில் மேலே குறிப்பிட்ட குவாண்ட் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டத்தில் மாதம் ரூ.12 ஆயிரம் முதலீடு செய்திருந்தால் தற்போது ரூ.50 லட்சமாக வளர்ந்திருக்கும். இதேபோல், மற்ற ஃபண்டுகளும் நல்ல வளர்ச்சியை கொடுத்துள்ளன.

8 / 8

பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்வது தனிநபரின் விருப்பத்தை பொறுத்தது. முதலீட்டு முன், செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணரை தொடர்புக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க டிப்ஸ்