ஹோண்டாவின் முதல் EV ஸ்கூட்டர்.. இந்தியாவில் அறிமுகம்.. முழு விவரம்! - Tamil News | honda's first ev scooter will be launced on March 2025: Check Price, features and mileage iin tamil | TV9 Tamil

ஹோண்டாவின் முதல் EV ஸ்கூட்டர்.. இந்தியாவில் அறிமுகம்.. முழு விவரம்!

Published: 

20 Sep 2024 12:31 PM

Honda Activa EV Launch timeline revealed: ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளது. மேலும் இது விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.

1 / 5உள்நாட்டு

உள்நாட்டு சந்தையில், பல இருசக்கர வாகன நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் புதுமையான EV மூலம் மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் இது மக்களின் தேவையை அதிகரித்திருக்கும் நிலையில் புதிய EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனத்திற்கு சில அழுத்தங்கள் உள்ளது. சந்தையில் அதிக தேவை இருந்த போதிலும் EV ஸ்கூட்டரின் வெளியீட்டை ஒத்தி வைத்திருந்த ஹோண்டா நிறுவனம் இப்போது இறுதியாக புதிய EV தயாரிப்பை வெளியிடுவதற்கான நேரத்தை நிர்ணயித்துள்ளது.

2 / 5

EV களுக்குத் தேவையான சார்ஜிங் வசதி இல்லாததையும் EV தொழில்நுட்பத்தில் எதிர்கொள்ளும் புதிய சிக்கலையும் உன்னிப்பாக கவனித்து ஹோண்டா தனது EV ஸ்கூட்டர் தயாரிப்புகளை பல மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஹோண்டா தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மார்ச் 2025 க்குள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தி உள்ளது.

3 / 5

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சுட்சுமு ஒட்டானி செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய EV ஸ்கூட்டரின் வெளியீட்டை உறுதி செய்து, இந்த ஆண்டு டிசம்பரில் புதிய EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவது குறித்து சூசகமாக தெரிவித்தார்.

4 / 5

இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஹோண்டா தனது EV ஸ்கூட்டரை கர்நாடகாவில் உள்ள நரசபுரா ஆலையில் உருவாக்க உள்ளது. வழக்கமான பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே அசெம்பிளி லைனில் புதிய EV ஸ்கூட்டரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விவரங்கள் தெரியவில்லை என்றாலும் நிறுவனம் இதனை ஆக்டிவா எலக்ட்ரிக் என்று அழைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் பேட்டரி - ஸ்வாப்பிங் தொழில்நுட்பம் இருக்கும். ஒரு சார்ஜில் 120 கிமீ முதல் 150 கிமீ மைலேஜ் வரை கிடைக்கும். எக்ஸ் ஷோரூம்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5

இதன் மூலம் புதிய ஹோண்டா EV ஸ்கூட்டர் மாடல், ஓலா எலக்ட்ரிக் மற்றும் எதர் எனர்ஜி போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் பஜாஜ் சேடக் EV, TVS iCube, Hero Vida V1 போன்ற தொழில்நுட்பத்தில் பிரபலமான நிறுவனங்களுக்கும் கடும் சவாலாக அமையும்.

Follow Us On
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version