Breathing Trouble: பருவ மாற்றத்தால் ஆஸ்துமா பிரச்சனையா..? ஆரோக்கியமாக வைப்பது எப்படி? - Tamil News | How can people with asthma stay healthy during the change of season; health tips in tamil | TV9 Tamil

Breathing Trouble: பருவ மாற்றத்தால் ஆஸ்துமா பிரச்சனையா..? ஆரோக்கியமாக வைப்பது எப்படி?

Published: 

26 Nov 2024 19:02 PM

Health Tips: பருவ மாற்றத்தின்போது பலருக்கு மூச்சு திணறல் பிரச்சனை ஏற்படும். பருவ மாற்றத்தின்போது ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்படும் என்றால், மிகவும் கவனமுடன் இருப்பது முக்கியம்.

1 / 6பருவ மாற்றத்தின்போது சளி இருமல், காய்ச்சல், மூக்கு அடைப்பி, தலைவலி போன்ற பிரச்சனை ஏற்படும். மழை மற்றும் குளிர்காலத்தில் சுமார் 90 சதவீத மக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால், உடல் சோர்வடைய தொடங்கும்.

பருவ மாற்றத்தின்போது சளி இருமல், காய்ச்சல், மூக்கு அடைப்பி, தலைவலி போன்ற பிரச்சனை ஏற்படும். மழை மற்றும் குளிர்காலத்தில் சுமார் 90 சதவீத மக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால், உடல் சோர்வடைய தொடங்கும்.

2 / 6

மேலும், இந்த பருவ மாற்றத்தின்போது பலருக்கு மூச்சு திணறல் பிரச்சனை ஏற்படும். பருவ மாற்றத்தின்போது ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்படும் என்றால், மிகவும் கவனமுடன் இருப்பது முக்கியம்.

3 / 6

எனவே, இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் தவிர்க்க முன்கூட்டியே சில விஷயங்களை மேற்கொள்வது நல்லது. சளி மற்றும் ஒவ்வாமை ஏற்படும்போது, நமது மென்மையான சுவாசப்பாதையின் தசைகள் சுருங்க தொடங்கும். இதன் விளைவாக சுவாச பாதையில் ஆக்ஸிஜன் சென்றடையாது. இது சுவாசிக்க கடினமாக மாற்றும்.

4 / 6

நீங்கள் சுவாச பிரச்சனைகள் உள்ளவராக இருந்தால், புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், அதை உடனடியாக விட்டுவிட வேண்டும். அதேபோல், உங்களை சுற்றியுள்ள யாரும் புகைபிடித்தால் அந்த இடத்தை விட்டு விலகி இருங்கள். வீட்டில் சாம்பிராணி, கொசு விரட்டி போன்றவற்றை பயன்படுத்தினாலும் அங்கிருந்து வெளியேறுவது நல்லது.

5 / 6

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இன்ஹேலர் பெரிதும் உதவியாக இருக்கும். தொடர்ந்து இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் இன்ஹேலரை எப்போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த மாதிரியான இன்ஹேலரை பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

6 / 6

இரவு நேரத்தில் ஆஸ்துமா பெரிதும் தொந்தரவு செய்யும், எப்போது படுக்கை அருகில் ஒன்று இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அதிக எடை கொண்டவர்களுக்கும், ரத்தத்தில் வைட்டமின் டி குறைவாக இருப்பவர்களுக்கும் சுவாச நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்