ஏசி போட்டு காரை ஓட்டினால் மைலேஜ் குறையுமா? உண்மை என்ன? - Tamil News | how much mileage will be reduced if you drive a car with ac details in tami | TV9 Tamil

ஏசி போட்டு காரை ஓட்டினால் மைலேஜ் குறையுமா? உண்மை என்ன?

Published: 

29 Oct 2024 08:53 AM

AC in Car: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் அனைவரும் தங்கள் கார்களில் ஏசியை பொருத்திக் கொள்கிறார்கள். வெயில் காலம் மட்டுமின்றி மழை, குளிர் என எல்லா காலங்களிலும் தற்பொழுது காரில் ஏசி பயன்படுத்தப்படுகிறது. காரில் ஏசி பயன்படுத்துவதால் எரிபொருள் எவ்வளவு செலவாகிறது? காரில் ஏசி ஒரு மணி நேரம் ஏங்கினால் எவ்வளவு செலவாகும்? இதனால் எவ்வளவு மைலேஜ் குறையும்? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

1 / 5கார் ஓட்டுபவர்கள் கோடைக்காலத்தில் ஏசியைப் பயன்படுத்துவது வழக்கம். இப்போதெல்லாம் பலர் மழைக்காலம் மற்றும் குளிர் காலங்களிலும் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் காரில் ஒரு மணி நேரம் ஏசி பயன்படுத்தினால் எவ்வளவு எரிபொருள் செலவாகும் தெரியுமா?  எரிபொருள் விலை தற்பொழுது மிக அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், காரின் ஏசி எவ்வளவு எரிபொருளைப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். காரின் ஏசியை நீண்ட நேரம் இயக்குவதும் காரின் மைலேஜை பாதிக்கும்.

கார் ஓட்டுபவர்கள் கோடைக்காலத்தில் ஏசியைப் பயன்படுத்துவது வழக்கம். இப்போதெல்லாம் பலர் மழைக்காலம் மற்றும் குளிர் காலங்களிலும் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் காரில் ஒரு மணி நேரம் ஏசி பயன்படுத்தினால் எவ்வளவு எரிபொருள் செலவாகும் தெரியுமா? எரிபொருள் விலை தற்பொழுது மிக அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், காரின் ஏசி எவ்வளவு எரிபொருளைப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். காரின் ஏசியை நீண்ட நேரம் இயக்குவதும் காரின் மைலேஜை பாதிக்கும்.

2 / 5

காரின் மைலேஜ் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அது காரின் வகையைப் பொறுத்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் இஞ்சின்கள் பொதுவாக சிறியதாகவும் சக்தி குறைந்ததாகவும் இருக்கும். அவற்றின் இயந்திரம் 1 முதல் 1.5 லிட்டர் வரை இருக்கும். அதே சமயம் பெரிய காரின் அதாவது 7 சீட்டர் எஸ்யூவியின் இஞ்சின் பெரியது. இவை 2 லிட்டர் அல்லது 2 லிட்டருக்கும் அதிகமான இன்ஜின்களைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக, எஸ்யூவிகள் அதிக எரிபொருளைச் செலவழிக்கின்றன.

3 / 5

ஹேட்ச்பேக் அல்லது செடான் காரில் ஒரு மணி நேரம் ஏசி பயன்படுத்தினால், ஒரு மணி நேரத்திற்கு 0.2 முதல் 0.4 லிட்டர் எரிபொருள் செலவாகும். அதே சமயம், ஒரு மணி நேரம் எஸ்யூவியில் ஏசியை இயக்கினால், ஒரு மணி நேரத்திற்கு 0.5 முதல் 0.7 லிட்டர் எரிபொருள் செலவாகிறது. மேலும், ஒரு காரின் ஏசி எவ்வளவு எரிபொருளைப் பயன்படுத்துகிறது என்பது மற்ற காரணிகளைப் பொறுத்தது.

4 / 5

கார் சிறியதாக இருந்தால், காரின் இன்ஜின் சக்தி குறைவாக இருந்தால், ஏசி இயங்கும் போது எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும். அதே நேரத்தில், காரின் அளவு பெரியதாக இருந்தால், அதாவது நீங்கள் எஸ்யூவியில் ஏசியை இயக்கினால், எரிபொருள் நுகர்வு அதிகமாக இருக்கும்.

5 / 5

வெளியில் வெப்பநிலை அதிகமாக இருந்தால், ஏசி அதிக அளவில் ஓட வேண்டும். இதுவும் மைலேஜில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே அடிக்கடி ஏசியை ஆன் செய்து ஜன்னல்களை திறந்தால் கார் குளிர்ச்சியடைய அதிக நேரம் எடுக்கும். மைலேஜ் குறைவுக்கு இதுவே முக்கிய காரணம். வாகனம் ஓட்டும்போது மைலேஜை எவ்வளவு ஏசி பாதிக்கிறது என்பதும் நீங்கள் காரை ஓட்டும் இடத்தைப் பொறுத்தது. நகரங்களில் வாகனம் ஓட்டுவது அடிக்கடி போக்குவரத்தில் நிறுத்தப்பட வேண்டும். அப்போது என்ஜின் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், மைலேஜும் குறைகிறது.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்