காலை முதல் இரவு வரை நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் தாகம் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும் ஆண்கள் 10 முதல் 14 டம்ளர் தண்ணீரும், பெண்கள் 8 முதல் 12 டம்ளர் தண்ணீரும் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, தண்ணீருக்குப் பதிலாக ஜூஸ், பால், டீ, தேங்காய்த் தண்ணீர் போன்றவற்றைக் குடிக்கலாம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாது என்றும் இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.