Pillow Cover: கழிவறையில் இருக்கும் கிருமியை விட நூறு மடங்கு அதிகம்… தலையணை உறைகளை மாற்றாதவர்களுக்கு எச்சரிக்கை… - Tamil News | How to clean a pillow follow these tips details in TamilPillow, bed sheet, clean, weekly once change, skin allergy | TV9 Tamil

Pillow Cover: கழிவறையில் இருக்கும் கிருமியை விட நூறு மடங்கு அதிகம்… தலையணை உறைகளை மாற்றாதவர்களுக்கு எச்சரிக்கை…

Published: 

16 Nov 2024 17:54 PM

Changing Pillow Covers: கழிவறைகளில் உள்ள கிருமிகளை விட தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளில் கிருமிகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே தலையணை உறைகளை முடிந்தவரை சுத்தம் செய்து அடிக்கடி மாற்றுவது மிக முக்கியம்.

1 / 5உடல்

உடல் நலப் பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் உள்ளது. அதில் பெரும்பாலும் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களின் மூலமாகவே வந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. நாம் பயன்படுத்தும் பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்திருந்தால் பல நோய்களிலிருந்து தப்பலாம்

2 / 5

அதில் மிக முக்கியமாக நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய தலையணை. தலையில் உள்ள அழுக்குகள் அனைத்தும் தலையணைகளில் தங்கிவிடும். அவற்றில் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் உள்ளன. படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்

3 / 5

நாம் படுக்கை விரிப்பு மற்றும் தலையணியில் உறங்குவதால் இந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா விரைவில் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தோல் தொடர்பான பிரச்சனைகள், அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. கழிப்பறையை விட நூறு மடங்கு கிருமிகள் தலையணைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் உள்ளன.

4 / 5

தலையணைகளை துவைக்க முடியாது. ஆனால் முடிந்தவரை அவற்றை சுத்தம் செய்து வாரத்திற்கு ஒருமுறை சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உரைகள் ஆகியவற்றை பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும்.

5 / 5

பேக்கிங் சோடா உடன் வெந்நீரில் கழுவி வெயிலில் காய வைத்தால் கிருமிகள் விரைவில் அழிக்கப்படும். தலையணை உறைகளில் துர்நாற்றம் வரும் வரை வைக்காமல் விரைவாக மாற்ற வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நடிகை டாப்ஸி பன்னுவின் வொண்டர்ஃபுல் ஆல்பம்
டீன் ஏஜில் நடிகை மிருணாள் தாக்கூர்... வைரல் போட்டோ
மயோனைஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க இதை பண்ணுங்க