Pure Camphor: நீங்கள் பயன்படுத்தும் சூடம் உண்மையானதா..? எவ்வாறு கண்டறியலாம்..? - Tamil News | How to find out if the camphor you are using is pure or not in tamil | TV9 Tamil

Pure Camphor: நீங்கள் பயன்படுத்தும் சூடம் உண்மையானதா..? எவ்வாறு கண்டறியலாம்..?

Published: 

21 Nov 2024 20:00 PM

Camphor Benefits: சூடத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாகவும், நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று கூறப்படுகிறது. சூடம் தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

1 / 6கற்பூரம்

கற்பூரம் என்று அழைக்கப்படும் சூடம் நம் வீட்டு பூஜை அறையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகும். இதை பயன்படுத்துவதன் மூலம் காற்றில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும். இது மட்டுமின்றி, வீட்டில் உள்ள நெகட்டிவ் ஆற்றலை நீக்கி, பாசிட்டிவான மனநிலையை தருமென்று நம்பப்படுகிறது.

2 / 6

சூடத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாகவும், நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று கூறப்படுகிறது. சூடம் தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் சூடத்தை போட்டு காய்ச்சி, கை மற்றும் கால்களில் தேய்த்தால் வலி பறந்து ஓடும்.

3 / 6

அந்தவகையில், நீங்கள் பூஜைக்கு பயன்படுத்தும் சூடம் உண்மையானதா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த செய்தி தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சூடத்தை சில விஷயங்களை கொண்டு உண்மையானதா என்பதை கண்டறியலாம்.

4 / 6

போலி சூடத்தை நிறத்தின் அடிப்படையில் அடையாளம் காணலாம். பொதுவாக போலி சூடம் வெள்ளையாக இருக்காது. இது சற்று வெளிர் பழுப்பு அல்லது சற்று மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். தூய சூடத்தை எரித்த பிறகு சாம்பல் எஞ்சாது. ஆனால், போலி சூடமானது சாம்பலை கொடுக்கும்.

5 / 6

சுத்தமான சூடமானது வெகுநேரம் நின்று பொறுமையாக எரியும். இது கரை சிறிது நேரம் ஆகும். ஆனால் நீங்கள் ஏற்றி வைக்கும் சூடம் விரைவில் எரிந்து காணாமல் போனால் அது போலி சூடம் என்று தெரிந்து கொள்ளலாம். மேலும், கலப்பட சூடத்தை எரிக்கும் போது சுடர் சிறிது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

6 / 6

அதுவே, தூய சூடத்தை எரித்தால் நல்ல வாசனையுடன் கரும் புகை வெளியேறும். இதை தொடர்ந்து, சுத்தமான சூடத்தை தண்ணீரில் போட்டால் அது கீழே மூழ்கிவிடும். ஏனெனில் தூய சூடம் கனமானது. ஆனால் போலி சூடம் தண்ணீரில் மிதக்கும்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?