Weight Gain: 10 நாட்களில் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா..? இதை பாலோ பண்ணுங்க..! - Tamil News | How to gain weight in 10 days; health tips in tamil | TV9 Tamil

Weight Gain: 10 நாட்களில் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா..? இதை பாலோ பண்ணுங்க..!

Published: 

24 Sep 2024 23:17 PM

Health Tips: தினமும் 5 முதல் 6 முறை சாப்பிடுவது மிக முக்கியம். இதற்காக நீங்கள் 3 கனமான உணவுகள் மற்றும் 2 காலை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது லேசான காலை உணவுக்கு பிறகு மாலை 6 மணிக்கு சிறிது சிறிதாக 4 முறை உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் அதேபோல், இரவு 8 மணிக்குள் இரவு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல், எப்போது பசிக்கிறதோ அப்போதெல்லாம் சாப்பிட பழகி கொள்ளுங்கள்.

1 / 7உடல்

உடல் பருமனை குறைக்க பலரும் தினசரி கடினமாக உழைத்து வரும் நிலையில், எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லை என்று சிலர் கவலை படுகின்றனர். இப்படியான சூழ்நிலையில் சில ஆரோக்கியமான உணவை எடுத்துகொண்டு 10 முதல் 15 நாட்களில் உடலை அதிகரிக்கலாம் என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

2 / 7

10 நாட்களில் நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் தினசரி நார்மலாக எடுத்துக்கொள்ளும் கலோரிகளை விட 1000 கலோரி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் உடல் பருமனை அதிரடியாக உயர்த்த உதவி செய்யும்.

3 / 7

தினமும் 5 முதல் 6 முறை சாப்பிடுவது மிக முக்கியம். இதற்காக நீங்கள் 3 கனமான உணவுகள் மற்றும் 2 காலை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது லேசான காலை உணவுக்கு பிறகு மாலை 6 மணிக்கு சிறிது சிறிதாக 4 முறை உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் அதேபோல், இரவு 8 மணிக்குள் இரவு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல், எப்போது பசிக்கிறதோ அப்போதெல்லாம் சாப்பிட பழகி கொள்ளுங்கள்.

4 / 7

காலையில் எழுந்தவுடன் முளைக்கட்டிய பயிறுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். அதன்பிறகு, கேரட் ஜூஸை சிறிது நேரத்தில் எடுத்து கொள்ளுங்கள். முளைகளில் புரதம் நிறைந்துள்ளது. இதனால் உடலுக்கு உடனடி சக்தி கிடைத்து, எடையையும் அதிகரிக்க செய்கிறது.

5 / 7

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பாக்கெட் உணவு மற்றும் நொறுக்கு தீனி உள்ளிட்ட உணவுகளை எடுத்து கொள்ளாதீர்கள். சத்தான உணவை மட்டுமே தேர்ந்தெடுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி செய்யும். நீங்கள் எடுத்து கொள்ளும் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும்.

6 / 7

உடல் எடையை அதிகரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். ஆனால், சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்காதீர்கள். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் உங்களால் சரியாக சாப்பிட முடியாது.

7 / 7

வெறும் உணவை சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் மட்டும் உங்கள் எடையை அதிகரிக்காது. நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால் உடற்பயிற்சி மேற்கொள்வது முக்கியம். நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால், உங்கள் வளர்சிதை மாற்றம் சரியாக நடக்காது. இதனால், உங்கள் உடலில் கொழுப்பு சேர தொடங்கும்.

Follow Us On
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version