முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையணுமா? இதை முயற்சி பண்ணுங்க! - Tamil News | How to get rid of dark spots on the face beauty tips in Tamil | TV9 Tamil

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையணுமா? இதை முயற்சி பண்ணுங்க!

Published: 

29 Nov 2024 16:04 PM

Dark Spots on Face: இன்றைய சூழலில் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் உள்ளன. பருக்கள் மறைந்தாலும் கரும்புள்ளிகள் அவ்வளவு சீக்கிரம் மறைவதில்லை. அவற்றை நீக்குவதற்கு சில டிப்ஸ்!

1 / 5கரும்புள்ளிகளை நீக்குவதில் பப்பாளி மிகவும் உதவுகிறது. பாதி பப்பாளியை எடுத்து அரைத்து அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அழைக்கவும். பின் அதனை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினால் உங்கள் முகம் பளபளக்கும்.

கரும்புள்ளிகளை நீக்குவதில் பப்பாளி மிகவும் உதவுகிறது. பாதி பப்பாளியை எடுத்து அரைத்து அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அழைக்கவும். பின் அதனை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினால் உங்கள் முகம் பளபளக்கும்.

2 / 5

முகத்தில் உள்ள கருமையை நீக்க தயிர் சிறப்பாக பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறுடன் இரண்டு தேக்கரண்டி தைரை கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் உங்கள் முகம் இதை வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3 / 5

வாழைப்பழத்தின் பாதி பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேபிள் ஸ்பூன் பால் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு அந்தக் கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

4 / 5

முகத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு தக்காளி மிகவும் உதவுகிறது. நன்கு மசித்த தக்காளியை தேன் மற்றும் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவலாம். முகத்தில் தடவிய பின் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.‌ இந்த முறையை செய்வது மூலம் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் செழிப்பாக இருக்கும்.

5 / 5

முகத்தை மிருதுவாக வைப்பதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் ஒரு பேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து கலக்க வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க டிப்ஸ்